விதிமீறல்: 77 பேருக்கு அபராதம்; இரண்டு உணவகங்கள் மூடப்பட்டன

கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் விதி­மீ­றல் இருந்­த­தால் இரு உணவு, பான நிலை­யங்­கள் மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளன.

இதில் 'ஸ்டீ­மோவ் ஸ்டீம்­போட் புஃபே' எனப் பெயர் கொண்ட பீச் ரோட்­டி­லுள்ள உண­வ­கம் 30 நாட்­

க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அது­போல், 'ஸ்டார்ஸ் பிஸ்ட்ரோ' எனப் பெயர் கொண்ட ஈஸ்ட் கோஸ்ட் சாலை­யில் உள்ள உண­வ­கம் 10 நாட்­க­ளுக்கு மூடப்­பட வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு நேற்று அறி­வித்­தது.

இதே­போல், கொவிட்-19 நோய் தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் விதி­மீ­ற­லில் ஈடு­பட்­ட­தற்­காக 77 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ெதரி­விக்­கப்­ப­டு­கிறது. இவர்­கள் அனை­வ­ரும், புதிய பாது­காப்பு விதி­மு­றை­கள் மே மாதம் 16ஆம் தேதி அம­லுக்கு வந்த நிலை­யில், பூங்­காக்­களில் இந்­தக் குற்­றத்தை புரிந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

இவை தவிர, பிடோக் கடைத்

ெ­தா­கு­தி­யில் உள்ள ஜயண்ட் பேரங்­காடி, ஈஸ்ட் கோஸ்ட் சாலை அரு­கில் உள்ள 'சிக்­ளப் வி' என்ற கொண்­டோ­மி­னிய குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் உள்ள கோல்ட் ஸ்டோ­ரேஜ் பேரங்­கா­டிக்­கும், அவை நுழை­வா­யி­லில் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­க­வில்லை என்­ப­தால், தலா $1,600 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

உண­வ­கங்­களில் உணவு வாடிக்­கை­யா­ளர்­கள் ஜூன் 21ஆம் தேதி­யி­லி­ருந்து அனு­ம­திக்­கப்­பட உள்ள நிலை­யில், விதி­மீ­றல்­க­ளுக்கு எதி­ராக அதி­கா­ரி­கள் கடு­மையான நட­வ­டிக்­கை­கள் எடுப்­பர் என்று அமைச்சு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இரு பிரி­வி­ன­ருக்கு இடையே ஒரு மீட்­டர் இடை­வெளி இருப்­பதை உறுதி ெசய்து அவர்­கள் கலந்­து­ற­வா­டு­வதை தடுக்­கா­மல் இருப்­பது, ஐவ­ருக்கு மேற்­பட்­டோர் ஒரு குழு­வி­ன­ராக இருக்க அனு­ம­திப்­பது, இரவு 10.30 மணிக்கு மேல் மது­பா­னம் விற்­பனை செய்­வது அல்­லது அருந்த அனு­ம­திப்­பது, நேரடி நிகழ்ச்­சி­கள், விளை­யாட்­டு­கள் போன்­ற­வற்­றுக்கு அனு­மதி தரு­வது ஆகி­யவை விதி­மீ­றல்­களில் அடங்­கும்.

"இவற்­றுக்கு எதி­ரான அம­லாக்க நட­வ­டிக்­கை­களில், அப­ரா­தம் விதிப்­பது, முதல் தடவை விதி­மீ­றும் உண­வ­கங்­க­ளைக்­கூட மூட உத்­த­ர­வி­டு­வது, உண­வ­கங்­கள், பொதுப் பொழு­து­போக்கு அம்­சங்­கள், மது­பா­னக் கூடங்­கள் ஆகி­ய­வற்­றின் உரி­மங்­களை ரத்து செய்­வது போன்­றவை இதில் அடங்­கும்." என்று அமைச்சு விளக்­கி­யது.

உணவு, பான நிலை­யங்­கள் போன்­ற­வற்­றில் கொரோனா நோய்ப் பர­வல் அபா­யம் அதி­கம் உள்­ள­தால் இவற்றை நடத்­து­ப­வர்­களும் இங்கு செல்­லும் வாடிக்­கை­யா­ளர்­களும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை கடு­மை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அமைச்சு நினை­வு­றுத்­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!