சினோவேக் உரிமம் பெற பல நிறுவனங்கள் விண்ணப்பம்

சினோவேக் உரிமம் பெற பல நிறுவனங்கள் விண்ணப்பம்

1 mins read
494ea2a6-e295-4b70-abc0-74c6c61e0e3e
-

இங்­குள்ள பல முக்­கிய தனி­யார் மருத்­து­வப் பரா­ம­ரிப்பு நிறுவனங்கள் கொவிட்-19 கிரு மிக்கு எதி­ரான சினோ­வேக் தடுப்­பூ­சியை வழங்­கும் உரி­மத்­துக்­காக விண்­ணப்­பம் செய்­துள்­ளன.

அந்­தத் தடுப்­பூ­சியை வழங்­கு­வ­தற்கு தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்போவ­தாக சுகா­தா­ர­அ­மைச்சு முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தது.

சினோவேக் தடுப்­பூசி உரி­மங்­க­ளுக்­காக விண்­ணப்­பிக்­கும் கால அவ­கா­சம் நேற்று நண்­ப­க­லு­டன் முடி­வு­பெற்­றது. இரு­பது தனி­யார் மருந்­த­கங்­க­ளைத் தேர்வு செய்து, தன்னிடம் உள்ள 200,000 சைனோ­வேக் தடுப்­பூ­சி­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும்­படி அவற்­றைக் கேட்­டுக்கோள்­ளப் போவ­தாக சுகா­தார அமைச்சு முன்­ன­தா­கக் கூறிற்று.

மவுண்ட் எலி­ச­பெத், மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா, கிளே­னீ­கல்ஸ், பார்க்வே ஈஸ்ட் உள்­ளிட்ட மருத்­து­வ­ம­னை­களை நடத்­தும் ஐஹெச்­ஹெச் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் தடுப்­பூ­சி­க­ளைப் போடும் உரி­மத்­துக்கு விண்­ணப்­பம் செய்­த­தாக ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

தற்­போ­தைய கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளுக்கு மாற்று வழி­களில் பலர் ஆர்­வம் காட்டி வருவதால் தங்­கள் குழு­மம் விண்­ணப்­பம் செய்­த­த­தா­கக் கூறி­னார் அதனை தலைமை செயல்­பாட்டு அதி­காரி டாக்­டர் நொவேல் இயோ.

தங்­கள் மருத்­து­வர்­கள், நோயா­ளி­கள், பொது­மக்­கள் என பல­ரும் அது பற்றி தங்­க­ளி­டம் கேள்­வி­கள் எழுப்­பி ­உள்­ள­தாக அவர் சொன்­னார்.