கப்பல் சரக்குகள் இறக்கும் பணியை நிறுத்த உத்தரவு

கப்பல் சரக்குகள் இறக்கும் பணியை நிறுத்த உத்தரவு

1 mins read
94c9e5ec-9881-4a5d-b778-1ca4220b2177
15 மீ. உயரத்திலிருந்து விழுந்த ஆடவருக்கு உதவும் குழுவினர். படம்: எஸ்சிடிஎஃப் -

கப்­பல் துறை ஊழி­யர் ஒரு­வர் வேலை செய்­து­கொண்­டி­ருந்த போது 15 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்­து­விட்­டார். இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து கப்­ப­லி­லி­ருந்து சரக்­கு­களை இறக்­கும் பணி­கள் அனைத்­தை­யும் நிறுத்தி வைக்­குமாறு ஜூரோங் துறை­மு­கத்­திற்கு மனி­த­வள அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் எழுப்­பிய வினா­வுக்கு நேற்று பதி­ல­ளித்த அமைச்சு, வியா­ழக்­கி­ழமை நிகழ்ந்த சம்­ப­வம் குறித்து விசா­ரித்து வரு­வ­தா­கக் கூறி­யது. கப்­ப­லி­லி­ருந்து உலோ­கக் குழாய்­களை இறக்­கிக் கொண்­டி­ருந்த 48 வயது மலே­சி­யர் திடீ­ரென்று கீழே விழுந்து­ விட்­டார். பல எலும்­பு­மு­றி­வுக் காயங்­க­ளு­டன் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் தற்­போது தீவிர சிகிக்சை பிரி­வில் இருப்­ ப­தாக அமைச்சு கூறி­யது.

இதற்­கி­டையே, சம்­ப­வத்தை தாங்­களும் விசா­ரித்து வரு­வ­தா­க­வும் காய­முற்ற ஆட­வ­ரின் உடல்­நிலை சீராக இருப்­ பதா­க­வும் ஜூரோங் துறை­மு­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

சம்­ப­வம் குறித்து வியா­ழக்­கி­ழமை மாலை 5 மணி­ய­ள­வில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்சிடிஎஃப்) தனது ஃபேஸ் புக்­கில் அன்­றி­ரவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

தனது படை­யி­னர் அங்கு செல்­லும்­போது ஆட­வர் ஒரு­வ­ருக்கு அவர் சார்ந்த நிறு­வ­னத்­தின் அவ­சர சமா­ளிப்­புக் குழு­வி­னர் உத­விக் கொண்­டி­ருந்­த­தாக அது கூறியது.