குடிநுழைவுக் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய நாட்டவருக்கு சிறை

குடி­நு­ழை­வுக் குற்­ற­வா­ளிக்கு அடைக்­க­லம் கொடுத்­த­தோடு மற்­ற­வரை அதி­கா­ரி­யி­டம் பொய் பேசத் தூண்­டிய குற்­றங்­க­ளுக்­காக இந்­திய நாட்­டைச் சேர்ந்த 37 வயது ஆட­வ­ருக்கு நேற்று 9 மாதம், 2 வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பர­ம­சி­வம் சீமான் எனப்­படும் அந்த ஆட­வர், லிட்டில் இந்தியா வாட்டாரத்தில் உள்ள ரோவல் ரோட்­டில் உள்ள வீடு ஒன்­றின் முதல் வாட­கை­தா­ர­ரான தமது நண்­பரை தவ­றான வாடகை ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­மாறு ஏமாற்­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த நண்­பர், வாட­கைக்கு விடப்­படும் வீடு பஃப்ளோ ரோட்­டில் உள்ள மற்­றொரு வீட்­டுக்­கா­னது எனக் கருதி ஒப்­பந்­த­தைப் படிக்­கா­மல் கையெ­ழுத்­திட்­டார். அதன் பின்­னர், கூடு­தல் வரு­வாய்க்­காக ரோவல் ரோடு வீட்டை தம்­மைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு பர­ம­சி­வம் உள்­வா­ட­கைக்கு விட்டு வந்­த­தாக குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது.

அவ்­வாறு வாட­கைக்கு வந்து தங்­கி­ய­வர்­களில் ஒரு­வ­ரான இலங்­கை­யைச் சேர்ந்த அப்­துல் காதிர் நைனா என்­ப­வர் சிங்­கப்­பூ­ரில் தங்க அனு­ம­திக்­கப்­பட்ட கால அவ­கா­சத்­தை­யும் மீறி 150 நாட்­கள் இங்கு இருந்­த­தன் மூலம் குற்­றம் புரிந்­த­வர்.

வீட்­டின் படுக்கை இடத்தை வாட­கைக்கு விட்­ட­போது அப்­துல் காதி­ரி­டம் பர­ம­சி­வம் எந்­த­வோர் அடை­யாள ஆவ­ணத்­தை­யும் கேட்டுப்­ பெ­ற­வில்லை.

அவர் சட்­டப்­ப­டி­யா­ன­வரா என்­பதை அவர் சரி­பார்க்­க­வில்லை.

இந்­நி­லை­யில் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அந்த வீட்டை ஆணைய அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­போது அப்­துல் காதிர் கைது செய்­யப்­பட்­டார்.

இது தொடர்­பாக முதல் வாட­கை­தா­ரரை அதி­கா­ரி­கள் விசா­ரித்­த­போது, பொய்­யான தக­வல்­க­ளைத் தெரி­விக்­கு­மாறு தம்­மி­டம் பர­ம­சி­வம் கூறி­ய­தாக அவர் சொன்­னார்.

ஆயி­னும் அவர் சொன்­ன­படி செய்­யா­மல் உண்மை நில­வ­ரத்தை அதி­கா­ரி­க­ளி­டம் அவர் விளக்­கி­ய­தாக ஆணை­யம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இச்­சம்­ப­வம் மூலம், குடி­நு­ழை­வுச் சட்­டத்தை மதிக்­கா­மல் பொறுப்­பற்ற வகை­யில் நடந்து குடி­நு­ழை­வுக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுத்த குற்­றத்­தில் பர­ம­சி­வம் ஈடு­பட்­ட­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

முதல் வாட­கை­தா­ர­ருக்­குத் தெரி­யா­மல் பர­ம­சி­வம் அந்த வீட்டை உள்­வா­ட­கைக்கு விட்­டி­ருப்­பதை அறிந்த ஆணை­யம், அந்த வாட­கை­தா­ர­ருக்கு வாய்­மொழி எச்­ச­ரிக்­கையை விடுத்­தது.

குடி­நு­ழை­வுக் குற்­றத்­திற்­காக அப்­துல் காதி­ருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு மாத சிறை, மூன்று பிரம்­ப­டி­கள் ஆகி­யன தண்­ட­னை­க­ளாக விதிக்­கப்­பட்­டன.

குடி­நு­ழை­வுக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுப்­பதை ஆணை­யம் கடு­மை­யா­கக் கரு­து­கிறது என அறிக்­கை­யைல் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!