பாலியல் செய்கைக்கு மறுப்பு தெரிவித்த மனைவியைத் தாக்கிய குற்றத்திற்காக ஆடவர் ஒரு
வருக்கு நேற்று இரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கெல்வின் கோக் சோக் மெங், 32, எனப்படும் அவர் தமது மனைவிக்கு எதிராக குடும்ப வன்
முறையில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே கோக் தாக்கியதால் அவரது மனைவி 2017 ஜனவரி 18ஆம் தேதி தனிநபர் பாதுகாப்பு ஆணை (பிபிஓ) பெற்றார். இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் 17ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பிய கோக் மதுபோதையில் இருந்தார்.
நள்ளிரவு சமயத்தில் மனைவியின் அறைக்குச் சென்ற அவர், பாலியல் செய்கைக்கு அப்பெண்ணை அழைத்தார்.
அதற்கு மறுத்ததால் அப்பெண்ணை அவர் தாக்கினார். அதன் காரணமாக தலை, முகம், கழுத்து, கை, தொடை ஆகிய பகுதிகளில் அப்பெண்ணுக்குக் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவ உதவிய நாடிய அதேவேளை காவல்துறையிடமும் அவர் புகார் செய்தார்.
வழக்கு விசாரணையின்போது, பெண் தமது கணவரை மன்னித்து விட்டதாலும் இருவரும் மணவாழ்க்கை ஆலோசனை பெற்று
வருவதாலும் இரு வார சிறைத் தண்டனைக்கு அரசுத் தரப்பு வேண்டுகோள் விடுத்தது. கோக் சார்பாக வழக்கறிஞர் எவரும் வாதாடவில்லை.
தமது வேலை பறிபோய்விடும் என்பதால் சிறைத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதி, "ஆனால் உங்கள் மனைவி உங்களுடன் நெருக்கமாக இருக்கத் தயாராக இல்லையே. நீங்கள் அவரிடம் வன்முறையாக நடந்துகொண்டீர்களே," என்று கூறி தண்டனையை அறிவித்தார்.

