செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
65d5636f-80db-4177-8d78-a719c1feaafd
-

காவல்துறை அதிகாரியைத் தாக்கியவருக்கு சிறை, பிரம்படி

காவல் துறை அதி­காரி ஒரு­வரை சர­மா­ரி­யா­கத் தாக்­கிய இரட்­டை­யர் தொடர்­பான வழக்­கில் நேற்று முகம்­மது ஃபர்­ஹான் ஜெஃப்ரி, 27, என்­ப­வ­ருக்கு நேற்று 33 மாதம் நான்கு வாரம் சிறை, மூன்று பிரம்­ப­டி­கள், $3,500 அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­பட்­டன. தாக்­கப்­பட்ட அதி­கா­ரி­யான சோங் ஜியா­வெய், 27, முகத்­தில் பல­த­ரப்­பட்ட காயங்­கள் ஏற்­பட்­ட­தன் விளை­வாக இரு நாட்­கள் அறுவை சிகிச்சை வார்­டில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தோடு 29 நாள் மருத்­து­வ­ம­னை­யில் தங்­கு­வ­தற்­கான விடுப்­பும் அளிக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு பிப்­ர­வரி 23ஆம் தேதி அதி­காலை 4 மணி­ய­ள­வில் ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட் 74ல் உள்ள புளோக் 755ன் கீழ்த்­த­ளத்­தில் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

ஃபர்­ஹா­னும் அவ­ரது மனை­வி­யும் அங்கு அப்­போது வாக்­கு­வா­தம் செய்­த­தால் காவல்­து­றை­யி­னர் வந்­த­னர். அவர்­க­ளிடம் விசா­ரணை தொடங்­கி­ய­போது அந்த புளோக்­கில் குடி­யி­ருந்த ஃபர்­ஹா­னின் இரட்டை சகோ­த­ரர் முகம்­மது ஃபிக்ரி ஜெஃப்ரி தலை­யிட்டு அதி­கா­ரி­க­ளின் முகத்தை நோக்கி விரலை நீட்டி ஆக்­ரோ­ஷத்­து­டன் சத்­தம் போட்­டார். பின்னர், "எந்த அதிகாரியின் முகம் உனக்குப் பிடிக்கவில்லை," என்று ஃபர்ஹானிடம் ஃபிக்ரி கேட்டார். சார்­ஜண்ட் சோங்கை அவர் காட்டினார். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரியை இரட்டையர் சர­மா­ரி­யாகத் தாக்­கி­னர். அதி­கா­ரி­யைத் தாக்­கி­யது, பெண் காவ­லரை தகாத வார்த்­தை­க­ளால் புண்­ப­டுத்­தி­யது, காவல்­துறை வாக­னத்­தைச் சேதப்­ப­டுத்­தி­யது, குண்டர் கும்­ப­லில் உறுப்­பி­ன­ராக இருந்­தது என தம் மீதான குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தை­யும் ஃபர்­ஹான் ஒப்­புக்­கொண்­டார். அவ­ரது சகோ­த­ரர் மீதான விசா­ரணை நிலு­வை­யில் உள்­ளது.

உயிரைப் பறித்த விபத்து பற்றி விசாரிக்க எஸ்எம்ஆர்டி குழு

எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது அங் மோ கியோ பணிமனை யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உள்ளது. அன்றைய தினம் சிற்றுந்து ஒன்றை பழுதுபார்க்க 'ஜேக்' கருவி மூலம் அப்பேருந்து உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர் பாராதவிதமாக தொழில்நுட்பர் ஒருவர் அச்சம்பவத்தில் மாண்டார். மற்றோர் ஊழியர் காயமடைந்தார். இவ்விபத்து நடந்தது எவ்வாறு என்று தீர விசாரிக்க சுயேச்சையான இயந்திரப் பொறியியல் நிபுணரும் எஸ்எம்ஆர்டி நிறுவன இயக்குநரவை உறுப்பினருமான ஒருவரின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டு தப்பிய ஆடவருக்கு கூடுதலாக ஆறு மாத சிறை

20 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பி வந்த ஆடவருக்கு நேற்று கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குடிநுழைவு அதிகாரியை தவறாக வழிநடத்தியது, 2000ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறியது ஆகிய குற்றங்களுக்காக இந்தக் கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய ரான சிவகுமார் ராமச்சந்திரன், 46, எனப்படும் அந்த ஆடவர் சட்டவிரோதக் குடியேறிகளை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகக் கடத்தி வந்த குற்றத்திற்காக 1999 செப்டம்பர் 24ஆம் தேதி தண்டிக்கப்பட்டார். ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் அப்போது அவருக்கு விதிக்கப்பட்டன. பிணையில் வெளியே இருந்த அவர், 1999 அக்டோபரில் வேறொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். பல காலமாகத் தேடப்பட்டு வந்த சிவகுமாரை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலன் விசாரணைப் பிரிவு கைது செய்தது. இவ்வாண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஐந்தாண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேற்று உத்தரவிடப்பட்டது.