மூன்று தலைநகரம் குறித்து அமித் ஷாவுடன் ஜெகன் பேச்சு

மூன்று தலைநகரம் குறித்து அமித் ஷாவுடன் ஜெகன் பேச்சு

1 mins read
98d9144f-bbfb-4f4e-8edf-93bb8e75422e
அமித் ஷாவைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி. படம்: த இந்து இணையம் -

விஜ­ய­வாடா: ஆந்­திரா மாநில முதல்­வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மத்­திய உள்­துறை அமைச்­ச­ரான அமித் ஷாவைச் சந்­தித்து மூன்று தலை­ந­க­ரம் அமைப்­பது குறித்து ஒன்­றரை மணி நேரம் ஆலோ­சனை நடத்­தி­யி­ருக்­கி­றார்.

ஆந்­திரா மாநி­லம் இரண்­டா­கப் பிரிக்­கப்­பட்டு தெலுங்­கா­னா­வுக்கு ஹைத­ரா­பாத் தலை­ந­க­ர­மா­கச் செயல்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து அப்­போ­தைய ஆந்­திர முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு அம­ரா­வ­தியை ஆந்­தி­ரா­வின் தலை­ந­க­ர­மாக உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்.

ஆனால் ஜெகன்­மோ­கன் ரெட்டி ஆட்­சிப் பொறுப்­பேற்ற பிறகு அம­ரா­வ­தி­யோடு விசா­கப்­பட்­டி­னம், கர்­னூ­லை­யும் உள்­ள­டக்கி மூன்று இடங்­களில் தலை­ந­கர் செயல்­படும் திட்­டத்தை அறி­வித்­தார். அதன்­படி அம­ரா­வதி சட்­டப்­பே­ரவை தலை­ந­க­ரா­க­வும் விசா­கப்­பட்­டி­னம் நிர்­வாக தலை­ந­க­ரா­க­வும் கர்­னூல் நீதித்­துறை தலை­ந­க­ரா­க­வும் அமைக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.இதற்கு அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்து அதற்­கான மசோ­தா­வும் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

ஆந்­திரா முழு­வ­தும் தலை­ந­க­ரப் பணி­களை விரி­வாக்கி வட்­டா­ர­ம­ய­மாக்­கு­வது ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் திட்­ட­மா­கும்.

இந்­தச் சூழ்­நி­லை­யில் அமித் ஷாவைச் சந்­தித்­துள்ள முதல்­வர் ஜெகன், கர்­னூ­லுக்கு உயர்­நீ­தி­மன்­றத்தை மாற்­றும் பணிகளை துரிதப்­ ப­டுத்த வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது ஆந்­திர மாநி­லத்­துக்­குத் தேவை­யான பல்­வேறு கோரிக்­கை­க­ளை­யும் அவர் முன்­வைத்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. புதிய 13 மருத்துவக் கல்லூரி களைத் தொடங்குவதற்கான அனுமதி, அதற்குத் தேவையான நிதி, ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தொகை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.