பொது இடத்தில் நிர்வாணமாக திரிந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
9ba72cc5-92d7-4018-95e5-6c54d13d63dd
இந்தப் படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டவை. -

கடந்த வாரம் இணையத்தில் வேகமாகப் பரவிய காணொளிகளில், நிர்வாணமாக திரிந்த ஆடவர் மீது இன்று (ஜூன் 12) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இயோ சீ வேய், 24, என்ற அந்த ஆடவர் மீது பொது இடத்தில் நிர்வாணமாகத் தோன்றியதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

லோரோங் 8 தோ பாயோ புளோக் 212ல் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணியளவில் இயோ ஆடையின்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவரை மனநலப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் இரண்டு வாரங்கள் காவலில் வைக்குமாறு மாவட்ட நிதிபதி ரோனல்ட் குவீ உத்தரவிட்டார்.

ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பொது இடத்தில் தொல்லை தந்தது, பொது இடத்தில் வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது ஆகியவற்றுடன் போக்குவரத்து விதிமீறல்களின் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று கூறினர்.

யூனோசில் உள்ள ஒரு சாலைச் சந்திப்பில் மோட்டார்சைக்கிளில் ஓர் அடவர் ஆடை இல்லாமல் அமர்ந்துகொண்டிருந்த புகைப்படம் ஒன்று நேற்று முன்தினம் பகிரப்பட்டது.

அதே நோளில், அவரது காணொளி ஒன்றும் பரவியது. அதில் அவர் தீவு விரைவுச்சாலையில் 100 கிலேமீட்டர் வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார்.

அடுத்து அவர் ஆடையின்றி கார் ஒன்றின் மேலே ஏறிவதைக் காட்டும் காணொளியும் பகிரப்பட்டது.

பொது இடத்தில் ஆடையின்றி திரிந்ததாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்