துவாஸ் கட்டுமானத் தளத்தில் மாண்டு கிடந்த ஆடவர்; தவறி விழுந்ததாக சந்தேகம்

துவாஸ் கட்டுமானத் தளத்தில் மாண்டு கிடந்த ஆடவர்; தவறி விழுந்ததாக சந்தேகம்

1 mins read
5f6433bc-3b9e-4cd1-a370-dafba452e2f3
லோகோஸ் சவுத் ஈஸ்ட் ஏஷியா/யூடியூப்பிலிருந்து எடுக்கப்பட்ட படம் -
Google News Preferred Icon

துவாஸ் வட்டாரத்தில் கட்டப்பட்டு வரும் கிடங்கு ஒன்றின் கட்டு மானத் தளத்தில் கடந்த வியாழக்கிழமை ஆடவர் ஒருவர் மாண்டு கிடந்தார். அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

துவாஸ் சவுத் அவென்யூ 14ல் நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்கு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு அழைப்பு வந்ததாகப் போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

அவ்விடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அந்த 25 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

அச்சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் குற்றம் ஏதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இல்லை என்று போலிசார் கூறினர்.

லோகோஸ் துவாஸ் தளவாட மையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் சம்பவம் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்