நல்வாழ்வு அதிகாரி மேற்பார்வையில் ஆண்டுதோறும் சராசரியாக 77 சிறார்கள்

நல்வாழ்வு அதிகாரி மேற்பார்வையில் ஆண்டுதோறும் சராசரியாக 77 சிறார்கள்

1 mins read
2bd21729-6774-41e3-881a-48733c5f5e25
-
Google News Preferred Icon

பெற்றோரால் கட்டுப்படுத்த இயலாத டஸன் கணக்கான பிள்ளைகள் ஆண்டுதோறும் நல்வாழ்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள்.

பெற்றோர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உத்தரவு அனுமதி கிடைத்தால் சிறார்களை அதிகாரியின் கண்காணிப்பில் விட முடியும். அல்லது சிறார் விடுதிக்கு மூன்று ஆண்டு வரை அனுப்பலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்குச் சராசரியாக 77 பிள்ளைகள் இந்த உத்தரவுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இது பற்றி கருத்து கூறிய வல்லுநர்கள், நிலைமை சீராகும் அறிகுறி இருந்தாலும் கொரோனா காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு என்றனர்.