ஐந்து காசு நாணயம் நீடிப்பதில் கேள்வி

சிங்­கப்­பூ­ரில் ஐந்து காசு நாண­யத்­தின் புழக்­கம் அருகி வரு­வ­தால், அந்த நாண­யத்­தின் பயன்­பாடு நீடிக்­குமா என்ற கேள்வி ஏற்­பட்­டுள்­ளது.

1967ல் முதன்­மு­றை­யாக உருவாக்கப்பட்ட ஐந்து காசு நாண­யம் அதன் பின்­னர் மூன்று முறை வடி­வம் மாற்­றப்­பட்டது.

ஒரு காலத்­தில் சில்­ல­றை­யா­கத் தேவைப்­பட்­டது ஐந்து காசு. இன்று ஐந்து காசு சில்­ல­றை­யா­கக் கிடைத்­தால் சில வாடிக்­கை­யா­ளர்­கள் குறை­பட்­டுக் கொள்­வதாகவும் பணம் செலுத்­து­வோர் பெரும் பாலும் அவற்றை சில்­ல­றை­யா­கத் தரு­வ­தில்லை என்­றும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசிய கடைக்­கா­ரர்­கள் பலர் கூறி­னர்.

பெரும்­பா­லும் வயது மூத்த வாடிக்­கை­யா­ளர்­களே ஐந்து காசு நாண­யங்­க­ளைப் பயன்­ப­டுத்தி பணம் செலுத்­து­வ­தா­கக் கூறி­னார் தியோங் பாரு­வில் உள்ள ஸீடீபி சீன மருந்­துக்­க­டை­யில் பணி­யாற்­றும் திரு ரிச்­சர்ட் யிப்.

எனி­னும் சில கடை­கள் அந்த நாண­யம் சட்­டப்­படி செல்­லு­ப­டி­யா­கும் என்­ப­தால் அதனை ஏற்­கச் செய்­கின்­றன.

"பொருள்­கள் சேவை­க­ளுக்­­கான கட்­ட­ணம் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான ஒப்­பந்­தம்" என்­ப­தால், கட்­ட­ணத்தை எவ்­வாறு பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­பது வர்த்­த­கங்­க­ளின் விருப்­பம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறு­கிறது.

நாண­யச் சட்­டத்­தின் கீழ் ஐந்து காசு நாண­யங்­களை ஏற்க மறுப்­ப­தற்கு வர்த்­த­கங்­க­ளுக்கு அனு­மதி உண்டு. ஆனால் அது குறித்து கட்­ட­ணம் செலுத்­து­வோ­ரி­டம் முன்­கூட்­டியே எழுத்­து­பூர்­வ­மாக தெரி­விக்­க வேண்­டும்.

சரா­ச­ரி­யாக, ஒவ்­வொரு மாத­மும் இரண்டு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட ஐந்து காசு நாண­யங்­களைத் தயாரிப்பதாக ஆணை­யம் கூறி­யது. 2002ல் ஒரு முறை ஐந்து காசு நாண­யத்தைத் தயாரிப்பதை நிறுத்­தி­யது ஆணையம். தற்­போது, நாண­யத்­துக்­கான தேவை, பொது­மக்­கள் கருத்து ஆகி­ய­வற்­றைக் கண்­கா­ணித்து அதனை மீட்­டுக் கொள்­வது பற்றி முடி­வெ­டுக்­கும் என்­று ஆணை­யம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!