தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் கட்டுமானத் தளத்தில் மாண்டு கிடந்த ஆடவர்: தவறி விழுந்ததாக சந்தேகம்

1 mins read
70ca5cce-6a4e-4466-a6f6-debfff0b240f
-

துவாஸ் வட்­டா­ரத்­தில் கட்­டப்­பட்டு வரும் கிடங்கு ஒன்­றின் கட்­டு­ மா­னத் தளத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆட­வர் ஒரு­வர் மாண்டு கிடந்­தார். அவர் தவறி விழுந்து உயி­ரி­ழந்­த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

துவாஸ் சவுத் எவன்யூ 14ல் நடந்த அந்­தச் சம்­ப­வம் பற்றி தங்­க­ளுக்கு வியா­ழக்­கி­ழமை மாலை 5.30 மணிக்கு அழைப்பு வந்­த­தா­கப் போலி­சார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­த­னர். அவ்­வி­டத்­துக்­குச் சென்ற சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர், அந்த 25 வயது ஆட­வர் உயிரி­ழந்­து­விட்­ட­தா­கக் கூறி­னர். அச்சம்­ப­வம் பற்­றிய விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது. ஆனால் குற்­றம் ஏதும் நடந்­தி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கம் இல்லை என்று போலி­சார் கூறி­னர்.

லோகோஸ் துவாஸ் தள­வாட மையம் கட்­டப்­பட்டு வரும் இடத்­தில் சம்­ப­வம் நிகழ்ந்­தது. கிட்­டத்­தட்ட ஆறு பாடாங் திடல்­கள் அள­வி­லான இடத்­தில் மையம் கட்­டுப்­பட்டு வரு­கிறது. தள­வாட மையம் முழுமை பெறும்­போது அங்கு ஓர் இரண்டு மாடி கிடங்­கும் மற்­றொரு நான்கு மாடி கிடங்­கும் இருக்­கும். கட்­டு­மா­னத்­தின் முதல் கட்­டம் இவ்­வாண்டு நான்­காம் காலாண்­டில் முடி­வு­றும் என்று கூறப்­ப­டு­கிறது.

லோகோஸ் நிறு­வ­னத்­தின் இணை­யத்­த­ளம், கட்­ட­டத்­தின் முதல் தளத்­தில் ஆபத்­தான சரக்கு ­க­ளுக்கு அனு­மதி பெற்ற கிடங்கு அமைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு ஜன­வரி முதல் ஏப்­ரல் மாதம் வரை சிங்­கப்­பூ­ரில் 14 வேலை­யிட மர­ணங்­களும் ஜன­வரி முதல் மார்ச் மாதம் வரை, வேலை­யி­டத்­தில் காயம் ஏற்பட்ட கிட்­டத்­தட்ட 3,300 சம்­ப­வங்­களும் நிகழ்ந்தன.