ஆடையின்றி திரிந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஆடையின்றி திரிந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
42591fda-467a-4c06-bea9-187fbcbc1e97
-

கடந்த வாரத்­தில் இணை­யத்­தில் பர­வ­லாகப் பகிரப்பட்ட காணொளி­களில் ஆடை­யின்றி திரிந்த ஆட­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. இயோ சீ வேய், 24, பொது இடத்­தில் நிர்­வா­ண­மா­கத் தோன்­றி­ய­தன் தொடர்­பில் ஒரு குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார்.

தோ பாயோ லோரோங் 8 புளோக் 212ல் உள்ள திறந்­த­வெளி கார் நிறுத்­து­மி­டத்­தில் இயோ ஆடை­யின்றி காணப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவரை மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக மன­ந­லக் கழ­கத்­தில் இரண்டு வாரங்­கள் காவ­லில் வைக்­கு­மாறு மாவட்ட நிதி­பதி ரோனல்ட் குவீ உத்­த­ர­விட்­டார்.

ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் பொது இடத்­தில் தொல்லை தந்­தது, பொது இடத்­தில் வெறுக்­கத்­தக்க செய­லில் ஈடு­பட்­டது ஆகி­ய­வற்­று­டன் போக்­கு­வ­ரத்து விதி­மீ­றல்­க­ளின் தொடர்­பி­லும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் போலி­சார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கடந்த வெள்­ளிக் ­கி­ழமை கூறி­யி­ருந்­த­னர்.

யூனோ­சில் உள்ள ஒரு சாலைச் சந்­திப்­பில் மோட்­டார்­சைக்­கி­ளில் ஓர் ஆட­வர் ஆடை இல்­லா­மல் அமர்ந்­து­கொண்­டி­ருந்த புகைப்­ப­டம், கடந்த ஜூன் 10ம் தேதி பகி­ரப்­பட்­டது.

அதே நாளில், அவ­ரைப் பற்றிய காணொளி ஒன்­றும் பரவி­யது. அதில் அவர் தீவு விரை­வுச் சாலை­யில் 100 கிலோ­மீட்­டர் வேகத்­தில் மோட்­டார்­சைக்­கிளை ஓட்­டிக் கொண்­டி­ருந்­தார். அடுத்து ஆடவர் ஆடை­யின்றி கார் ஒன்­றின் மேலே ஏறிய காணொளி கிடைத்­தது. கார் ஓட்டுநர் கைபேசியில் பேசியபடி அந்த விடத்தை விட்டு நகர்ந்ததைக் காண முடிந்தது.

பொது இடத்தில் ஆடையின்றி தோன்றிய வழக்கில் குற்­றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவ­ருக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்­டனை அல்­லது 2,000 வெள்ளி அப­ரா­தம் அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.