மலேசிய பொது முடக்கத்தின் எதிரொலி: ஈரச் சந்தைகளில் காய்கறி விலை கூடியது

மலேசிய பொது முடக்கத்தின் எதிரொலி: ஈரச் சந்தைகளில் காய்கறி விலை கூடியது

3 mins read
5481137e-4b38-4510-8f0e-9e41bc3ae60a
தேக்கா சந்தையில் மீன் விற்பனை. காய்கறிகளின் விலை கூடியபோதும் கடல் உணவுகள், முட்டை, கோழி ஆகி­ய­வற்­றின் விலைகளில் அதிக மாற்­றம் இல்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலே­சி­யா­வில் தொடர்ந்து பெய்­து­ வ­ரும் மழை­யால், இங்கு காய்­க­றி­க­ளின் வரத்து பாதிக்­கப்­பட்டு சில ஈரச் சந்­தை­களில் காய்­க­றி­க­ளின் விலை சற்று கூடி­யுள்­ளது.

தக்­காளி விலைதான் ஆக அதி­க­மாக இரண்டு மடங்கு கூடி, கிலோ­வுக்கு 3 வெள்ளி விலை வரை விற்­கப்­ப­டு­கிறது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் இங்­குள்ள சில ஈரச்­சந்­தை­க­ளுக்­குச் சென்று விலை­ களைக் கேட்­ட­றிந்­த­போது அது தெரி­ய­வந்­தது.

தேக்கா சந்தை, டெக் வாய் சந்தை, கிம் மோ ஈரச் சந்தை, தோ பாயோ வெஸ்ட் சந்தை உள்­ளிட்ட ஒன்­பது சந்­தை­க­ளுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்று வந்­தது.

முட்­டைக்­கோசு, லெட்­டி­யூஸ் கீரை ஆகி­ய­வற்­றின் விலை­களும் கூடி­யுள்­ளன. இவை பெரும்­பா­லும் மலே­சிய பண்­ணை­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்­டு­வ­ரப் படு­கின்­றன.

காய்­கறி கடைக்­கா­ரர்­கள் பலர் விலை­கள் கூடி­ய­தற்கு, மலே­சி­யா­வில் பெய்­யும் கன­ம­ழை­தான் கார­ணம் என்­ற­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள், பரி­சோ­த­னை­கள், ஆகி­ய­வற்­று­டன் ஜூன் முதல் தேதி­யி­லி­ருந்து மலே­சி­யா­வில் நடப்­பில் உள்ள பொது­மு­டக்­கத்­தால் பண்­ணை­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை உள்­ளிட்­ட­வை­யும் காய்­கறி விலை அதி­க­மா­ன­தற்கு மற்ற கார­ணங்­க­ளா­கக் கூறப்­பட்­டன.

டெக் வாய் சந்­தை­யில் ஒரு கிலோ­ தக்­காளி ஆக அதி­க­மாக 3 வெள்­ளிக்கு விற்­கப்பட்டது. மலே­சி­யா­வில் பொது முடக்­கம் அறி­விக்­கப்­பட்ட ஜூன் முதல் தேதிக்கு முன்பு, அங்கு ஒரு கிலோ தக்­காளி $1 முதல் $1.50 வெள்ளி வரைக்­கும் விற்­கப்­பட்­டது. தெக் வாய் சந்­தை­யில் முட்­டை­கோ­சின் விலை ஆக அதி­க­மாக உயர்ந்­தி­ருந்­தது. முன்­ன­தாக $3.50 வெள்­ளிக்கு விற்ற முட்­டை­க்கோசு இப்­போது $5 வெள்­ளிக்கு விற்­கப்­ப­டு­கிறது.

மலே­சிய எல்­லை­யில் உடல்­வெப்­ப­நி­லைச் சோத­னை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. லாரி ஓட்டு­ நர்­க­ளுக்­கான உடல்­வெப்ப நிலைச் சோத­னை­யில் காய்ச்­சல் அறி­கு­றி­கள் இருந்­தால், லாரி­கள் திரும்ப அனுப்­பப்­ப­டுகின்­றன. அத­னால் தங்­க­ளுக்கு காய்­கறி வரத்து குறை­வா­க­வும் அத­னா­லும் தாங்­கள் காய்­க­றி­கள் விலையை உயர்த்­தி­ய­தாக சில காய்­க­றிக் கடைக்­கா­ரர்­கள் கூறி­னார்­கள்.

கேம­ரன் மலை­யில் அண்­மை­யில் கூடு­தல் மழை பொழிந்து வரு­கிறது. இது வழக்­க­மாக இக்­கா­ல­கட்­டத்­தில் காணாத ஒன்று, என்­றார் சிங்­கப்­பூர் காய்­கறி ஏற்­று­ம­தி­யா­ளர் இறக்­கு­ம­தி­யா­ளர் சங்­கத்­தின் துணைச் செய­லா­ளர் ஜெரி டான்.

இவ்­வே­ளை­யில் கடல் உணவு வகை­கள், முட்டை, கோழி ஆகி­ய­வற்­றின் விலை­களில் அதிக மாற்­றம் இல்லை என்று கூறப்­பட்­டது. ஆனால் ஹலால் கோழி விற்­ப­னை­யா­ளர்­கள் சிலர் கோழி விலை­கள் ஐந்து முதல் ஏழு விழுக்­காடு வரை அதி­க­மா­கி­யுள்­ள­தா­கக் கூறி­னர். ஆனால் அவற்­றின் விலையை தாங்­கள் உயர்த்­த­வில்லை என்று டெக் கீ சந்தை அருகே உள்ள அமீனா ஹலால் கோழிக் கடையை நடத்­தும் திரு நோர்­மான் ஃபிர்தவுஸ் சொன்­னார்.

பேரங்­கா­டி­க­ளைப் பொருத்­த­மட்­டும் காய்­க­றி­க­ளின் விலை­யில் மாற்­றம் இல்லை என ஃபேர்பி­ரைஸ், ஷெங்­சி­யோங் பேராங்­கா­டி­க­ள் தெரி­வித்­த­ன. உணவு விநி­யோ­கம் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க, பல இடங்­க­ளி­லி­ருந்து காய்­க­றி­க­ளைப் பெறு­வ­தாக அவை கூறின.

சிங்­கப்­பூ­ரில் உணவு விநி­யோ­கம் சீராக இருப்­பதை உறுதி செய்ய, உணவைத் தருவிப்பது, உள்ளூரில் உற்பத்தி உட்பட பல வழிகளை மேற்கொள்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.