சில வகை கினுவா சிற்றுண்டிகள் மீட்டுக்கொள்ளப்பட்டன
ஈட் ரியல் எனும் நிறுவனத்தின் சில வகை கினுவா பஃப் பொருட்களில் (படங்கள்) தெரிவிக்கப்படாத பொருட்கள் கலந்திருப்பதால் அவை விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த சிற்றுண்டிகளில் பால் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக அமைப்பு கூறியது.
உணவு விற்பனைச் சட்டத்தின்படி (உணவு விதிமுறைகள்), ஒவ்வாமை போன்ற மிகை உணர்வை ஏற்படுத்தக்கூடியவை உணவுப் பொருட்களில் இருந்தால், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அது பற்றி உணவுப் பொட்டலங்களில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சிற்றுண்டிகளை வாங்கியவர்கள் அதை உண்ண வேண்டாம் என்று அமைப்பு எச்சரித்தது.
சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரிடம் விசாரணை
புக்கிட் பாஞ்சாங்கில் மேற்கொள்ளப்பட்ட போலிஸ் சோதனையைத் தொடர்ந்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் கொவிட்-19 பாதுகாப்பு இடைவெளி கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும் 12 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கங்சா ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒன்பது மணி அளவில் ஜூரோங் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதாக போலிஸ் கடந்த வெள்ளிக்கிழமை ெவளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
12 வயது முதல் 70 வயது வரையிலான ஏழு ஆடவர்களும் ஐந்து பெண்களும் அங்கு சூதாட்டம் தொடர்பான நடவடிக்கைககளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் இரண்டு பேர் அந்த வீட்டை பொது சூதாட்ட இடமாகப் பயன்படுத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இருவரில் ஒருவர் 55 வயது மாது. மற்றவர் 53 வயது ஆடவர். மேலும் மூவர் மீது பொது சூதாட்டக் களத்தில் சூதாடியதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் 48 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ரொக்கப் பணமும் சூதாட்டம் தொடர்பான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பொது சூதாட்ட இடங்கள் சட்டத்தின் கீழ், ஓர் இடத்ைத பொது சூதாட்ட இடமாகப் பயன்படுத்துவோர் மீது 5,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

