சிங்கப்பூரில் இனங்கள் பற்றிய தவறான எண்ணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

சிங்கப்பூரர்களைப் போலவே நானும் அண்மைய பல இனவாதச் செயல்கள் பற்றி கவலை அடைகிறேன். எனக்கு மூன்று கவலைகள் உள்ளன.அத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதாகத் தெரிவது முதல் கவலை. சீன மேலாதிக்க உணர்வு காணப்படுவது இரண்டாவது கவலை. அத்தகைய அண்மைய சம்பவங்கள் நமது இந்திய சமூகத்தைக் குறி வைத்து இடம்பெறுவது மூன்றாவது கவலை.

சிங்கப்பூர் மிகவும் வெற்றிகரமான பல இன சமூகம். வெவ்வேறு இன குடிமக்கள் ஒருவர் மற்றொருவருடன் அமைதி, நல்லிணக்கத்துடன் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் எந்த இனமும் தனித்து ஏழ்மையில் வாழும் நிலை இல்லை. இந்த மகிழ்ச்சிகரமான நிலைக்கு நமது சட்ட முறையும் நம் அமைப்புகள், நம் கொள்கைகள், மக்களும் காரணம்.
சிங்கப்பூரில் அரசமைப்புச் சட்டம்தான் ஆக உயரிய சட்டம். சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் என்றும் எல்லாருக்கும் சரிசம சட்டப் பாதுகாப்பு உண்டு என்றும் அது கூறுகிறது.
இன பாரபட்சங்களை அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது.
ஒருவரின் சமய, இன உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே இடம்பெறும் பேச்சு, ஒரு குற்றம் என்று குற்றவியல் தண்டனைச் சட்டம் தெரிவிக்கிறது.

இன, சமய அடிப்படையில் மக்களுக்கு இடையில் வெறுப்பைத் தூண்டுவதும் நல்லிணக்கத்தை நிலைநாட்டி வருவதற்கு எதிரான செயல்களும் ஒரு குற்றம் என்று குற்றவியல் தண்டனைச் சட்டம் வரையறுக்கிறது. இதற்கு அப்பால் கீழறுப்புச் சட்டம் உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, வெவ்வேறு இன அல்லது வெவ்வேறு வகுப்பு மக்களிடையே கெட்ட எண்ணத்தைத் தூண்டுவதும் வெறுப்பைக் கிளப்பி விடுவதும் குற்றம்.
இப்படிப்பட்ட சட்ட ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் 1970ல் அமைக்கப்பட்டது. சட்டங்களைப் பரிசோதித்து எந்த ஒரு சட்ட அம்சமும் எந்த ஓர் இன, சமய சிறுபான்மையினருக்குப் பாரபட்சமாக இருக்கிறதா என்பதை மதிப்பிடுவது இந்த மன்றத்தின் முக்கிய பணி.

இந்த மன்றத்திற்குத் தலைமை நீதிபதி தலைவராக உள்ளார். பிரபலமான குடிமக்கள் இதில் இருக்கிறார்கள். இன்றைய தேதிவரை இந்த மன்றம் பாதக அறிக்கை எதையும் வெளியிட்டதில்லை.

இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை. எல்லாபள்ளிக்கூடங்களும் ஆண்டுதோறும் இன நல்லிணக்க தினத்தைக் கொண்டாடுகின்றன. சமூக அளவில் அரசாங்கம் அனைத்து இன, சமய நன்னம்பிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இளையர்கள், முதியவர்கள் அடங்கிய நம் குடிமக்களின் மனதில் இன நல்லிணக்கத்தின் முக்கியத்தை, அதன் மதிப்பை பதிய வைக்கவே இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.

‘அனைத்துலக இன பாரபட்சத்தை துடைத்தொழிப்பதற்கான ஐநா அனைத்துலக உடன்பாடு’ என்ற ஓர் ஏற்பாட்டை 1965ல் ஐநா ஏற்றுக்கொண்டது. அது 1969ல் நடப்புக்கு வந்தது. சிங்கப்பூர் இந்த முக்கியமான உடன்பாட்டின் ஓர் அங்கம்.
இதில் அங்கம் வகிக்கும் நாடுகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐநாவிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தனது அறிக்கைகளை ஐநா அலசி ஆராயலாம் என்று சிங்கப்பூர் இணங்கி இருக்கிறது.
சேனல் நியூஸ்ஏஷியா ஊடக நிறுவனமும் கொள்கை ஆய்வுக் கழகமும் 2019ல் இன உறவு பற்றி ஓர் ஆய்வை நடத்தின. இன ரீதியிலான தப்பெண்ணம் சிங்கப்பூரில் பரவலாக இருக்கிறது என்பது அந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.

குறிப்பாக மலாய்க்காரர்கள், இந்தியர்களிடம் சீனர்கள் அத்தகைய எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரிந்தது. பயிற்சி ஆசிரியர்கள் பற்றிய ஆய்வு ஒன்றிலும் இது எதிரொலித்தது. இந்த இனத்தவர் இப்படித்தான் என்ற பொதுவான ஒரு கருத்து பயிற்சி ஆசிரியர்களிடம் இருந்ததை இந்த ஆய்வு காட்டியது.
சீனர்கள் என்றால் அவர்கள் தாங்கள் விடுபட்டுப்போவதாக உணர்வார்கள், லௌகீக வாழ்வு, தொழில் முனைப்பு, நடை முறைசாத்தியம், மூட நம்பிக்கை பெரும் இலக்கு ஆகியவை சீனரிடம் காணப்படும்.

மலாயக்காரர்கள் என்றால் மிகவும் சமயம் சார்ந்தவர்கள், குடும்ப விசுவாசம் மிக்கவர்கள், பாரம்பரிய விரும்பிகள், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் என்று இருப்பவர்கள்,, கருணை உள்ளவர்கள், செயலூக்கம் குறை வானவர்கள்.அதேபோல் இந்தியர்கள் என்றால் பாரம்பரிய விரும்பிகள், குடும்ப உறவுகளில் விசுவாசத்துடன் இருப்பவர்கள், மிகவும் சமயம் சார்ந்தவர்கள், வாதாடுபவர்கள் என்ற ஒரே மாதிரியான எண்ணம் பயிற்சி ஆசிரியர்களிடம் காணப்பட்டதாக அந்த ஆய்வை நடத்திய ஏஞ்சலின் கூ, லிம் காம் மிங் என்ற இருவரும் அறிக்கையில் குறிப்பிட்டனர். இன தப்பெண்ணம் என்பது பொதுவாக தவறானது.

ஆனால் அது சட்டத்திற்குப் புறம்பானதல்ல. இருந்தாலும் சிங்கப்பூரில் இத்தகைய தப்பெண்ணம் தனது அருவெறுப்பான முகத்தைக் காட்டும் போதெல்லாம் அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். அத்தகைய தப்பெண்ணம் சிறுபான்மைச் சமூகத்தவரின் கண்ணியத்தைப் பாதித்துவிடும். அவர்களின் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.
மனித உரிமைகள் பற்றிய தேசிய ஆணையம் நம்மிடம் இல்லை என்பதால் பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டி, தப்பெண்ணங்களையும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துகளையும் ஒடுக்க வேண்டும்.
சிங்கப்பூரில் சீன மேலாதிக்க உணர்வு சம்பவங்களைக் காண்கிறேன். சிங்கப்பூருக்கு வெளியே இடம்பெறக்கூடிய பல நிலவரங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். உலக அளவில் சீனா தலை எடுப்பதன் காரணமாக சீன சிங்கப்பூரர்களிடையே பெருமித உணர்வு ஏற்படுவது இயல்புதான், இதில் தவறு கிடையாது.

ஆனால் சீனாவின் சாதனைகளின் பெருமை காரணமாக சீன சிங்கப்பூரர்களிடம் மேலாதிக்க உணர்வு- அதாவது தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற உணர்வு ஏற்பட அனுமதிக்கக்கூடாது.

இன தேசியவாதம்- அடைளக் கொள்கைகள் என்ற இதர இரண்டு அம்சங்களும் உள்ளன. இவற்றை சிங்கப்பூருக்குள் நாம் அனுமதிக்கக்கூடாது.
சிங்கப்பூரில் இந்தியர் எதிர்ப்பு மனநிலை குறித்தும் எனக்குக் கவலை உள்ளது. ஏன் இந்தியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை. சிங்கப்பூரில் அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு இந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற ஓர் எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்திவுடன் கூடிய சிங்கப்பூரின் தாராள வர்த்தக உடன்பாடு காரணமாக இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்து வேலைபார்க்க வசதி ஏற்பட்டு இருக்கிறது என்ற தவறான எண்ணமும் நிலவுகிறது.

காரணங்கள் என்னவாக இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் முன்வந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இது தக்க தருணம்.

இந்தியாவின் இந்தியர்-உள்ளூர் இந்தியர் என்று பகுத்துப் பார்க்க சிங்கப்பூரர்களால் முடிவதில்லை. ஆகைல் இந்தியாவின் இந்தியராக இருந்தாலும் உள்ளூர் இந்தியராக இருந்தாலும் எல்லா இந்தியரும் இலக்காகி இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் இனத் தாக்குதலுக்கு இங்கு இடமில்லை.

நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஐபிஎஸ் சிங்கப்பூர் கண்ணோட்டம் 2021 மாநாட்டில் பேசியபோது, சிங்கப்பூரில் இன்னமும் இனவாதம் இருப்பதாகத் தெரிவித்தார். சூழ்நிலையை மேம்படுத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார்.
இங்கு சூழ்நிலை 10 முதல் 20ஆண்டு களுக்கு முன் இருந்ததைவிட இப்போது மேம்பட்டு இருக்கலாம். ஆனால் குறையின்றி முழுமையாக அது இல்லை. நாம் தொடர்ந்து செயல்பட்டு அதைச் சிறந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!