சூவா சு காங்கில் கொலை முயற்சி- 60 வயது ஆடவர் கைது

சூவா சு காங்கில் கொலை முயற்சி- 60 வயது ஆடவர் கைது

1 mins read
61b33cf8-12ca-4fc7-9262-2ec5cf3ca749
-

மற்றோர் ஆடவரைக் கத்தியால் குத்திய சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு சுவா சூ காங் அவென்யு 3ல் நடந்ததாக போலிசார் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், கத்தி காயங்களுடன் 52 வயது ஆடவரைச் சம்பவ இடத்தில் கண்டதாக போலிசார் தெரிவித்தனர். சந்தேக நபரும் குத்தப்பட்ட ஆடவரும் ஒருவரையொருவர் தெரிந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட ஆடவர் கொலை முயற்சிக்காகக் குற்றம் சாட்டப்படுவார்.