தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நார்த் பிரிட்ஜ் வீட்டில் தீ: மருத்துவமனையில் ஐவர்

1 mins read
d96ffad2-cfbf-4ae1-ac37-da84ceca806c
-

வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தீ முண்டதில் ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள புளோக் ஒன்றின் ஏழாவது மாடியில் இருந்த அந்த வீட்டில் கிட்டத்தட்ட அனைத்துமே எரிந்து சாம்பலாகிவிட்டதாக ஜாலான் புசார் குழுத்தொகுதி எம்பி டெனிஸ் புவா நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். இரவு 10.15 மணியளவில் புளோக் 8ல் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது என்றார் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர். தண்ணீரைப் பீய்ச்சிடும் கருவியைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது. ஆறு முதல் 10வது மாடி வரை புளோக்கில் வசித்த சுமார் 120 பேர், பாதுகாப்பு கருதி தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தீக்கு இரையான தங்கள் வீட்டுக்குப் போக முடியாத அதன் குடியிருப்பாளர்களை அருகிலுள்ள தற்காலிக வீட்டில் தங்க வைத்துள்ளதாக திருவாட்டி புவா குறிப்பிட்டார். படம்: ஃபேஸ்புக்