ஓட்டுநர்கள் நலன் கருதி கோஜெக் தனது தரகுக் கட்டணத்தைக் குறைத்தது
வாகனப் பகிர்வு நிறுவனமான கோஜெக், தனது ஓட்டுநர் களின் நலன் கருதி இம்மாதம் முதல் குறைந்தது அடுத்த ஆண்டு இறுதி வரை தனது தரகுக் கட்டணத்தை பாதி யாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். அப்படி என்றால், கோஜெக் ஓட்டுநர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வோரு பயணத்தில் கிடைக்கும் கட்டணத்தில் 90 விழுக்காட்டை வைத்துக்கொள்ளலாம். முன்பு அந்த விகிதம் 80 விழுக் காடாக இருந்தது.
இம்மாதம் முதல் தனது வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் $1 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. இப்போது தரகுக் கட்டணமும் குறைக்கப்பட்டி ருப்பதால், ஓட்டுநர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
சேவைக் கட்டணம் என்று அழைக்கப்படும் தரகுக் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், கொவிட்-19 பெருந் தொற்று காலத்தில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் அழுத்தம் சற்று குறையும். தனது ஓட்டுநர்களின் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அவர்களில் பாதி பேர் குறைவான சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
அத்துடன் தனது பயணியை ஏற்றிக்கொள்ள மூன்று கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தொலைவைத் தாண்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு கூடுதலாக $3 வழங்கு தொகை யாகக் கொடுக்கப்படும் என்றும் கோஜெக் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு லியன் சூங் லுயன் தெரிவித்தார்.
தனது பயணங்களுக்கு $1 கூடுதல் கட்டணத்தை இம்மாதம் அறிவித்த கோஜெக், இம்மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தனது ஓட்டுநர்கள் பெறும் கூடுதல் கட்டணத்துக்குத் தரகுக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் விவரித்தது.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் பங்களிப்புக்கு நன்றி கூறிய நிகழ்ச்சி
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு இல்லப் பணிப் பெண்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கென ஒரு சிறப்பான மெய்நிகர் நேரடிக் கலை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
அதில் இல்லப் பணிப்பெண்கள், அவர்களின் முதலாளி கள் என சுமார் 9,000 பங்கேற்றனர். இல்லப் பணிப்பெண் கள் பாடிய பாடல்கள், ஆடிய நடனங்கள், இசைக் கருவி வாசித்தல் போன்ற அங்கங்கள் நேரடியாகவும் ஒலிப்பதிவாக வும் படைக்கப்பட்டன.
இல்லப் பணிப்பெண்கள் நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற இந்த மூன்று மணிநேர வருடாந்திர நிகழ்ச்சியில், இந்தோனீசிய பாடகர் டெலோன் தம் ரினும் மியன்மார் பாடகர் கின் சுஷின்னும் பங்கேற்றனர்.
இல்லப் பணிப்பெண்கள் நிலையம், என்டியுசி ஆகியவை ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் காணொளி வழியாகப் பங்கேற்ற மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், இல்லப் பணிப்பெண்கள் வேலை செய்யும் வீடு களுக்கு வருகையளித்தல், அவர்களுக்கு உதவும் 1,000க்கு மேற்பட்ட தொண்டூழியர்கள், நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி உதவி சேவை ஆகியவை மூலம் தமது அமைச்சு ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
சிங்கப்பூரின் 24ல் பாதி நகர்களில் மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வீடுகள்
சிங்கப்பூரில் உள்ள 24 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நகர்களில் பாதி அதாவது 12 நகர்களில் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்புள்ள வீடுகள் உள்ளன என்று கழகத்தின் தரவுகள் காட்டுகின்றன.
அவற்றில் ஒன்று முதிர்ச்சியடையாத வீடமைப்புப் பேட்டை யான ஹவ்காங்கில் உள்ளது. அங்குள்ள ஹவ்காங் சென்ட்ரல் புளோக் 851ல் உள்ள 177 சதுர மீட்டர் பரப்பளவி லான எக்சகியூடிவ் மேசனட் வீடு, 2018 ஜனவரியில் ஒரு மில்லின் வெள்ளிக்கு விற்கப்பட்டது.
இதுவரை மில்லியன் வெள்ளி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான விற்பனையைத் தொட்ட 389 வீடுகளில் ஹவ்காங் வீடு மட்டும்தான் முதிர்ச்சியடையாத வீடமைப்புப் பேட்டையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சியுள்ள 388 வீடுகள் முதிர்ச்சியடைந்த நகர்களான அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் தீமா, மத்திய வட்டாரம், கிளமெண்டி, கேலாங், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், சிராங்கூன், தோ பாயோ ஆகியவற்றில் உள்ளன.
தற்போது ஆக அதிகமாக (118 வீடுகள்) மில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகள் மத்திய வட்டாரத்தில்தான் விற்கப்பட்டன. அந்த வீடுகள் அனைத்தும் கேன்டோன் மண்ட் ரோட்டில் உள்ள 'தி பினக்கல்@டக்ஸ்டன்' அடுக்குமாடித் தொகுதியில் உள்ளன.
இரண்டாவது நிலையில் பீஷான் (74 வீடுகள்), மூன்றா வது நிலையில் குவீன்ஸ்டவுன் (55 வீடுகள்), நான்காவது நிலையில் தோ பாயோ (40 வீடுகள்) ஆகியவை உள்ளன.

