பெயர்கள், தொடர்பு எண்கள், சில சமயங்களில் நிதி தொடர்பான தகவல்கள் போன்ற மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதன் விளைவாக 600,000 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மொத்தம் $75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2019ல் தற்காப்பு அமைச்சு மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் 98,000 பேரின் கசிந்திருப்பது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது சுகாதாரப் பராமரிப்பு பயிற்சி வழங்குநரான எச்எம்ஐ சுகாதார சேவைகள் கழகம்.
அதற்காக அந்நிறுவனத்துக்கு இம்மாதம் 10ஆம் தேதி $35,000 அபராதம் விதித்தது தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம். அச்சம்பவத்தில், 250 எச்எம்ஐ ஊழியர்கள் உட்பட 110,000க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதைத் தவிர, மின் வர்த்தக தீர்வுகள் நிறுவனமான 'வெப்காடா', 520,000 பேரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க தவறியதற்காக ஆணையம் அதற்கு $25,000 அபராதம் விதித்தது.
அரசாங்கத்துக்கு தளவாட சேவைகளை வழங்கி வரும் எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படையின் 2,400 ஊழியர்களின் தகவல்களைப் பாதுகாக்க தவறியதால். அதற்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. இறுதியாக, 'லார்சன் அண்ட் டோப்ரோ இன்ஃபோடெக்' நிறுவனத்துக்கு $7,000 அரபாதம் விதிக்கப்பட்டது.

