புக்கிட் மேரா வியூ சந்தை தொற்று குழுமம்: 85 பேருக்கு கட்டாய பரிசோதனை

புக்கிட் மேரா வியூ சந்தை தொற்று குழுமம்: 85 பேருக்கு கட்டாய பரிசோதனை

2 mins read
189f8428-20ad-4e05-b43c-344f0d3bcf63
-

புக்­கிட் மேரா வியூ புளோக் 116ல் உள்ள கடைக்­கா­ரர்­கள் 85 பேருக்கு கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை நேற்று காலை தொடங்கியது.

கிரு­மி பரி­சோ­த­னைக்­காக புளோக் 125ஏயில் தற்­கா­லிக பரி­சா­த­னைக்­கூ­டம் அமைக்­கப்­பட்­டது.

புளோக் 115ல் உள்ள புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யத்­தில் புதிய கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக் குழு­மம் உருவாகி­யுள்­ளதாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சுகாதார அமைச்சு அறி­வித்­திருந்தது. அங்கு தற்­போது ஆறு கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டுள்­ளன.

கிரு­மித் தொற்­று­க­ளைத் தொடர்ந்து அங்­குள்ள 182 கடை­களும் சுத்­தம் செய்­யும் பணி­க­ளுக்­காக ஞாயிற்­றுக்­கி­ழமை மூடப்­பட்­டன. இன்று வரை பணி­கள் நடை­பெ­றும்.

சந்­தை­யில் மே 25 முதல் பணி­யாற்றி வந்த ஊழி­யர்­கள் எல்­லா­ரும் தனி­மை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு பரி­சோ­த­னை­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

அரு­கில் உள்ள புளோக் 116இல் இருக்கும் கடை­களில் மே 25லிருந்து பணி­யாற்­றிய எல்­லா­ருக்­கும் கிருமி பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

"இன்­னும் அதி­க­மான, கண்­ட­றி­யப்­ப­டாத கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து நிறுத்­து­வது அதன் நோக்­கம்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

தற்­கா­லி­கக் கூடத்­தில் பரி­சோ­த­னைக்­கா­கச் சென்ற கடைக்­கா­ரர்­கள் பல­ரும் கிரு­மித் தொற்­றி ­யி­ருக்­கக் கூடும் எனும் அச்­சம் இல்லை எனக் கூறி­னர்.

பரி­சோ­தனை செய்­து­கொள்­வது இப்­போது இயல்­பான ஒன்­றா­கி­விட்­ட­தா­கச் சொன்னார், சோத­னையை மேற்­கொண்ட உண­வங்­கா­டிக் கடைக்­க­ரர் திரு தான்.

அத்­து­டன், 115 புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யத்­துக்கோ அரு­கில் உள்ள புளோக் 116ல் உள்ள கடை­களுக்கோ மே 25 முதல் ஜூன் 12 வரை­யில் சென்ற குடி­யி­ருப்­பா­ளர்­களும் பொது­மக்­களும் இல­வ­ச­மா­கப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்­ள­லாம் என்­றும் அமைச்சு கூறி­யி­ருந்­தது.

ஆனால் இவர்­க­ளுக்­கான பரி­சோ­த­னை­கள் புளோக் 125ஏயில் உள்ள தற்­கா­லி­கக் கூடத்­தில் நடை­பெ­ற­வில்லை. இவர்­கள் புக்­கிட் மேரா பல­துறை மருந்­த­கத்­துக்கோ பரி­சோ­தனை வச­தி­கள் உள்ள அரு­கில் உள்ள மருந்­த­கங்­க­ளுக்கோ செல்­ல­லாம்.

பரி­சோ­த­னை­க­ளுக்­காக புளோக் 125ஏயில் உள்ள தற்­கா­லி­கக் கூடத்­துக்­குச் சென்ற குடி­யி­ருப்­பா­ளர்­கள் அங்­கி­ருந்து திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் அதி­ருப்தி அடைந்­த­னர்.

தற்­கா­லி­கக் கூடத்­துக்­கு நேற்று சென்­றி­ருந்த தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா, அரு­கில் உள்ள இடங்­களில் கிரு­மிப் பரி­சோ­த­னை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும்­படி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தம்­மி­டம் கேட்­டுக்­­கொண்­ட­தா­கவும் அது பற்றி சுகா­தார அமைச்­சி­டம் கோரிக்கை வைத்­தி­ருப்­ப­தா­க­வும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறினார்.