சிங்கப்பூரில் நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, சமூகத்தில் 18 பேர் உட்பட 25 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார அமைச்சு நேற்று அதன் அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தது.
ஊழியர்கள் தங்குவிடுதியில் ஒருவருக்கு கிருமி தொற்றியுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட கிருமித் தொற்றுகளில் இரண்டு பேருக்கு மற்ற கிருமித் தொற்றுச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பில்லை. 17 பேருக்கு முந்தைய தொற்று சம்பவங்களுடன் தொடர்பு உள்ளன. அவர்களில் 13 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். நான்கு பேருக்கு கண்காணிப்புச் சோதனைகளின்போது கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த அறுவருக்கு தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இல்லத் தனிமை உத்தரவில் அல்லது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றது அமைச்சு. அந்த ஆறு பேரில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் 62,301 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

