செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4130c595-aef1-4845-9ec1-017a295ff307
-

ஃபிஜி, இஸ்ரேலிய பயணிகளுக்கு தனிமை உத்தரவில் மாற்றங்கள்

ஃபிஜியில் கொவிட்-19 பரவல் மோசமாகி வருவதால் அங்கிருந்து இங்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கடந்த 21 நாளில் ஃபிஜிக்கு சென்று வந்த பயணிகள் இனி குறிப்பிட்ட தங்கும் இடங்களில் 21 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னதாக ஃபிஜியிலிருந்து வந்த பயணிகள் 14 நாட்கள் குறிப்பிட்ட தங்கும் இடங்களிலும் 7 நாட்கள் இல்லத்தில் அல்லது வேறு தங்கும் இடத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. புதிய மாற்றம் நேற்று நடப்புக்கு வந்தது.

இவ்வேளையில் நாளை 16ம் தேதி 11.59 மணி முதல், இஸ்ரேலிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் குறிப்பிட்ட தங்கும் இடங்களில் 14 நாட்களும் இல்லத்தில் அல்லது வேறு தங்கும் இடத்தில் 7 நாட்களும் தங்கலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

இஸ்ரேலில் கொவிட்-19 பரவல் மேம்பட்டு வருவதே அந்த தளர்வுக்குக் காரணம்.

ஊழியருக்கு தொற்று; தாதிமை இல்லத்தில் கிருமி நாசினி தெளிப்பு

ஹவ்­காங்­கில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தாதிமை இல்­லத்­தில் ஊழி­யர் ஒரு­வ­ருக்குக் கிரு­மித்தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, நேற்று அங்கு சுத்திகரிப்புப் பணிகளும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடை­பெற்­றன.

தாதிமை இல்­லத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட வழக்­க­மான கிரு­மிச் சோத­னை­க­ளின்­போது, துணைத் தாதி­யா­கப் பணி­யாற்­றிய 23 வயது இந்­தி­யக் குடி­ம­க­னுக்கு கிருமித்தொற்று, கடந்த 11ம் தேதி வெள்­ளிக்­கி­ழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஆனால் அன்று அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மற்­றொரு பரி­சோ­தனை அவ­ருக்கு தொற்று இல்லை என்று காட்­டி­யது. மறு­நாள் ஊழி­ய­ருக்கு மீண்­டும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­தில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அவ­ருக்கு ஏற்­க­னவே ஏற்­பட்ட கிரு­மித்­தொற்­றின் எச்­சம் உட­லி­லி­ருந்து வெளி­யேறிக் கொண்­டி­ருக்­க­லாம் என்­றும் அவ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வர்­க­ளுக்கு கிருமி தொற்­றும் அபா­யம் இல்லை என்­றும் சுகா­தார அமைச்சு கடந்த ஞாயிற்­றுக்­ கிழமை கூறி­யி­ருந்­தது.