'தடுப்பூசிகளால் இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு'

'தடுப்பூசிகளால் இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு'

2 mins read
2b9c6fce-ff02-48ee-a98c-b1620ecb558f
-

கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான எம்­ஆர்­என்ஏ வகை (mRNA) தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வ­தால் இதய பாதிப்பு ஏற்­படும் அபா­யம் மிகக் குறைவு என்று மருத்­துவ நிபு­ணர்­க­ளைக் கொண்ட மூன்று தன்­னிச்­சை­யான அமைப்­பு­கள் கூறி­யுள்­ளன. பொது­ந­ல­னைக் கருத்­தில் கொண்டு, மக்­கள் தடுப்­பூ­சி­களைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அந்த அமைப்­பு­கள் பரிந்­துரை செய்­துள்­ளன.

மருத்­து­வர் கழ­கத்­தின் இத­ய­நோய் நிபு­ணர் பிரிவு, சிங்­கப்­பூர் இத­ய­நோய் சங்­கம், மருத்­து­வக் கழ­கம், ஆகி­யவை அதன் தொடர்­பில் நேற்று கூட்­ட­றிக்கை விடுத்­தன.

தடுப்­பூ­சி­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யத்­தை­விட அவற்­றைப் போட்­டுக்­கொள்­ளா­த­தால் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் மிக அதி­கம் என்று அவை கூறின.

புர­தச்­சத்தை உரு­வாக்­கும் வழியை உட­லுக்­குக் கற்­றுத் தந்து அதன் வழி தடுப்­பாற்­றல் ஏற்­பட வகை செய்­கின்­றன எம்­ஆர்­என்ஏ தடுப்­பூ­சி­கள். அவற்­றைப் போட்­டுக் கொண்­ட­தால் இங்கு ஆறு பேருக்கு இத­யத் தசை­யில் அல்­லது இதயத்தைச் சுற்­றி­யுள்ள பகுதியில் அழற்சி உண்­டாது. அவர்­களில் நால்­வர் 30 வய­துக்­கும் குறை­வான ஆட­வர்­கள்.

அவர்­கள் தற்­போது நல­மாய் உள்­ள­தா­க­வும் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­விட்­ட­தா­க­வும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் கூறி­யி­ருந்­தது.

எம்­ஆர்­என்ஏ வகை இரண்­டாம் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொள்­ளும்­கை­போது சில­ருக்கு, குறிப்­பாக 30 வய­துக்­கும் குறைந்த ஆண்­க­ளுக்கு, இதய அழற்சி ஏற்­படும் சிறிய அபா­யம் உள்­ள­தாக இங்கு கிடைக்­கப்­பெற்ற தர­வு­கள் கோடி­காட்­டு­கின்­றன.

ஆனால் அத்­த­கைய சம்­ப­வங்­கள் மிக­வும் அரிது என்­றும் தடுப்­பூசி போட்­ட­தால்­தான் அழற்சி ஏற்­பட்­டதா என்­ப­தில் தெளிவு இல்லை என்­றும் அதி­கா­ரி­களும் நிபு­ணர்­களும் கூறி­யுள்­ள­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களை, குறிப்­பாக இளம் ஆட­வர்­களை, அதன் பின்­னர் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக ஒரு வாரத்­துக்கு கடு­மை­யான உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­ட­வேண்­டாம் என்று நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் அர­சாங்­கம் மூலம் போடப்­பட்­டு­வ­ரும் ஃபைசர், மொடர்னா தடுப்­பூ­சி­கள் எம்­ஆர்­என்ஏ வகை (mRNA) தடுப்­பூ­சி­கள் ஆகும்.