ஒரு மாதத்துக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்ட சாங்கி விமான நிைலயத்தின் ஜுவல் கடைத்தொகுதியில் சுமார் 2500 ஊழியர்களுக்கு கிருமிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் தொற்று இல்ைல என்று தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசிக்குத் தகுதிபெறும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினருக்கு குைறந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
ஜுவல் கடைத்தொகுதியின் நிர்வாகம் நேற்று அத்தகவல்களைத் தெரிவித்தது.
கடைத்தொகுதி ஒரு மாதத்துக்கு மூடப்பட்டிருந்ததால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உதவும் நோக்கில், ஜூன் 21 முதல் 27ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு வாரத்துக்கு வாடகைத் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜுவல் சாங்கியின் தலைைம நிர்வாகி திருவாட்டி ஹங் ஜீன் கூறினார்.
அத்துடன் ஜுவலில் கூடுதல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைத்தொகுதி திறக்கும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் குளிர்சாதனத்தால் அங்கு குளிரூட்டப்பட்ட காற்று வெளியேற்றப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் ஜுவல் கடைத்தொகுதி முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.
கடைத்தொகுதி நேற்று திறந்ததை முன்னிட்டு அங்கு ஆட்கள் வரத்தொடங்கினர். அவர்களில் பிள்ளைகளைக் கூட்டி வந்த பெற்றோரும் அடங்குவர்.
ஜுவலுக்கு வருவதால் பயம் ஏதும் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார் தமது பிள்ளைகளுடன் அங்கு வந்திருந்த திருமதி சுவா யீ ஸுன்.
சாங்கி விமான நிலையத்தில் தொற்றுக் குழுமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முனையங்கள் ஒன்று, மூன்று ஆகியவற்றுடன் ஜுவல் கடைத்தொகுதியும் கடந்த மாதம் 13ஆம் தேதி மூடப்பட்டது.

