வர்த்தகர்களின் நம்பிக்கை மேம்பட்டுள்ளபோதிலும் சிரமத்தில் கட்டுமானம், போக்குவரத்துத் துறைகள்

வர்த்தகர்களின் நம்பிக்கை மேம்பட்டுள்ளபோதிலும் சிரமத்தில் கட்டுமானம், போக்குவரத்துத் துறைகள்

2 mins read
57bd747a-3173-44ca-b5cb-b77b1e434160
நிதி, உற்பத்தி, மொத்த வியாபாரம் ஆகிய துறைகளில் வர்த்தக வாய்ப்பு மேம்பட்டு உள்ளது. இருப்பினும், கட்டுமானம், போக்குவரத்துத் துறைகள் தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கு வதாக தெரிவிக்கப் பட்டது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்­வாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் வர்த்­த­கம் மேம்­படும் என்று உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு இருக்­கும் நம்­பிக்கை மேம்­பட்­டுள்­ளது. நிதி, உற்­பத்தி, மொத்த வியா­பா­ரம் ஆகிய துறை­களில் வர்த்­தக வாய்ப்பு முன்­னேற்­றம் கண்­டி­ருப்­பதை அடுத்து கூடு­தல் வரு­மா­னத்தை இத்­துறையைச் சார்ந்த வர்த்­த­கர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

இருப்­பி­னும், கட்­டு­மா­னம் மற்­றும் போக்­கு­வ­ரத்து துறை­கள் தொடர்ந்து பின்­ன­டை­வைச் சந்­திக்­கின்­ற­னன. வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்­க­ளுக்­கான ஒட்டு­ மொத்த வர்த்­தக நம்­பிக்­கை­நிலை குறி­யீடு +4.07 புள்­ளி­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் வர்த்­த­கக் கடன் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

தொடர்ச்­சி­யாக நான்கு காலாண்­டு­க­ளா­கச் சரி­வைக் கண்ட குறி­யீடு இவ்­வாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் +3.94 புள்­ளி­கள் அதி­க­ரித்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சிங்­கப்­பூ­ரில் மீண்­டும் தலை­தூக்­கா­மல் இருக்க அண்­மை­யில் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக கட்­டு­மா­னம், போக்­கு­வ­ரத்து முத­லிய துறை­கள் பாதிப்­ப­டைந்­தி­ருப்­ப­தாக பிரி­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு­வாட்டி ஓட்ரே சியா கூறி­னார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரி­லும் உல­க­ள­வி­லும் நிலை­யற்­ற­நிலை தொடர்­கிறது. எனவே வர்த்­த­க­நிலை துறைக்­குத் துறை மாறு­படும் என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது," என்­றார் திரு­வாட்டி சியா.

மூன்­றா­வது காலாண்டை நெருங்­கும் நிலை­யில் கூடு­தல் பின்­ன­டை­வு­களுக்கு நிறு­வ­னங்­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்று அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

ஆறு முக்­கிய கூறு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒட்­டு­மொத்த வர்த்­தக நம்­பிக்­கை­நிலை குறி­யீடு நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

விற்­பனை அளவு, நிகர லாபம், விற்­பனை விலை, புதிய விற்­ப­னைப் பரி­வர்த்­த­னை­கள், சரக்­கின் அளவு, ஊழி­யர் எண்­ணிக்கை ஆகிய ஆறு முக்­கிய கூறு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு குறி­யீடு நிர்­ண­யிக்­கப்­படும். இவ்­வாண்­டில் முதல் காலாண்­டில் இந்த ஆறு கூறு­களும் மேம்­பட்­டன.

இரண்­டாம் காலாண்­டில் மூன்று கூறு­கள் மேலும் அதி­க­மாக மேம்­பட்­டுள்­ள­தாக பிரிவு கூறி­யது. விற்­பனை அளவு, நிகர லாபம் ஆகி­ய­வற்­று­க்கான குறி­யீடு இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் +9.92 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­கின.

இரண்­டாம் காலாண்­டில் இது +7.63 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­கி­யுள்­ளது. விற்­பனை விலைக்­கான குறி­யீடு +1.53 புள்­ளி­க­ளி­லி­ருந்து +2.29ஆக உயர்ந்­துள்­ளது.

புதிய விற்­ப­னைப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான குறி­யீடு மாற்­றம் ஏது­மில்­லாது 9.92ஆக உள்­ளது. சரக்­கின் அள­வுக்­கான குறி­யீடு -7.64லிருந்து -6.11ஆக ஏற்­றம் கண்­டுள்­ளது.

வேலை நிய­மன எண்­ணிக்­கைக்­கான குறி­யீடு பூஜ்­ஜி­யத்­தி­லி­ருந்து +3.05ஆக உயர்ந்­துள்­ளது.