சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டவருக்குச் சிறை

சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டவருக்குச் சிறை

2 mins read
5707585a-a411-45e1-9382-115e3550a5ae
-

இணை­யத்­தில் பெண்­ணாக தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு பாலி­யல் சேவை நாடி, தாம் விரித்த வலை­யில் 17 வயது சிறு­வ­னைச் சிக்க வைத்த ஆட­வ­ருக்கு 10 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட இளை­ய­ரின் அடை­யா­ளத்­தைக் காக்க அவ­ரது பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான 26 வயது முகம்­மது அல் மஸ்­ஃபு­யின் முசின் இணை­யத்­தில் தம்மை ஒரு பெண்­ணாக அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு தமக்­கும் தமது காத­ல­ருக்­கும் பாலி­யல் சேவை வழங்­கும் ஒரு­வர் தேவை என்று பதி­விட்­டி­ருந்­தார். அதற்­காக $250 வழங்க தயா­ராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை நம்பி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி­யன்று தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் இருக்­கும் ஒரு வீட்­டிற்கு அந்­தச் சிறு­வன் சென்­றார். அந்­தச் சிறு­வன் ஏற்­கெ­னவே வீட்­டை­விட்டு விரட்­டப்­பட்­ட­வர். இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு அந்த சிறு­வ­னி­டம் 'பாலி­யல் சேவை நாடிய பெண்'ணின் காத­ல­ராக தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட அல்­மஸ்­ஃபு­யின், அவரை அந்த வீட்­டில் தங்க அனு­ம­தித்­தார். சிறு­வ­னக்கு தங்க இடம் கொடுத்­த­தற்­காக அவ­னு­டன் அல் முஸ்­ஃபு­யின் பாலி­யல் உறவு கொண்­டார். அதற்­காக அந்த சிறு­வ­னி­டம் அவர் $50 கொடுத்­தார். அவ­ரு­டன் பாலி­யல் உறவு கொண்­ட­போது அச்­சி­று­வன் வயது குறைந்­த­வன் என்­பது அவ­ருக்­குத் தெரி­யும் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. 2017ஆம் ஆண்­டில் அந்­தச் சிறு­வன் லொகான்டோ எனும் விளம்­பர இணை­யப்­பக்­கத்­தைப் பயன்­ப­டுத்த தொடங்­கி­ய­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். பாலி­யல் சேவை நாடு­வோர் பதி­வேற்­றம் செய்த விளம்­ப­ரங்­கள் பற்றி அதி­லி­ருந்து அவர் தெரிந்­து­கொண்­டார். பாலி­யல் சேவை வழங்கி பணம் சம்­பா­திக்க அந்­தச் சிறு­வன் முடி­வெ­டுத்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தோ பாயோ வட்­டா­ரத்­தில் சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்ட போலிஸ் அதி­காரி அச்­சி­று ­வ­னின் கைபே­சி­யைச் சோத­னை­யிட்­ட­போது அவன் பாலி­யல் சேவை வழங்­கிய விவ­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது. இதை­ய­டுத்து, அல் முஸ்­ஃபு­யின் கைதானார்.