கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 60 வயது ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று 52 வயது ஆடவர் ஒருவரை ஓங் எங் சியூ கத்தியால் சரமாரி
யாகக் குத்தியதாகக் நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் புளோக் 407 சுவா சூ காங் அவென்யூ 3ல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை போலிசார் அடைந்தபோது தாக்கப்பட்ட ஆடவர் கத்திக்குத்துக் காயங்களுடன் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்தை போலிசார் அடைவதற்கு முன்பு ஓங் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தாக்குதல் நடந்து இரண்டு மணி நேரத்துக்குள் அவர் கைது செய்யப்பட்டார்.
இம்மாதம் 21ஆம் தேதியன்று ஓங் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

