பயணியை மானபங்கம் செய்த டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

பயணியை மானபங்கம் செய்த டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

2 mins read
10af0126-9479-4118-a225-1b9d929ab7c9
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் ஹாஜி முகம்மது யூசோஃப் ஏ.பி.எம். ஆடம்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெண் பய­ணியை மானபங்­கம் செய்த குற்­றத்­துக்­காக முன்­னாள் பகு­தி­நேர டாக்சி ஓட்­டு­ந­ருக்கு 13 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட 30 வயது பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்க அவ­ரது பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­

வி­டப்­பட்­டுள்­ளது. மான­பங்­கக் குற்­றம் 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5ஆம் தேதி­யன்று நிகழ்ந்­தது. தமது நண்­பர்­க­ளு­டன் மது­பா­னம் அருந்­தி­விட்டு அந்­தப் பெண் 56 வயது ஹாஜி முகம்­மது யூசோஃப் ஏ.பி.எம். ஆட­மின் டாக்­சி­யில் ஏறி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. பின் இருக்­கை­யில் அமர்ந்த அப்­பெண் பய­ணத்­தின்­போது தூக்­கத்­தில் ஆழ்ந்­த­தாக வழக்கு விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டது. அதி­காலை 5.30 மணி அள­வில் அப்­பர் பாய லேபார் சாலைக்கு அரு­கில் உள்ள லோராங் ஆ சூ வட்­டா­ரத்­தில் இருக்­கும் வாகன நிறு­வ­னத்தை டாக்சி அடைந்­ததை அடுத்து அப்­பெண்ணை யூசோஃப் மான­பங்­கம் செய்­த­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார். யூசோஃப் தம்­மைத் தொடு­வதை உணர்ந்­த­தும் அப்­பெண் கத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, ஓட்­டு­நர் இருக்­கைக்­குத் திரும்பி யூசோஃப் அப்­பெண் செல்ல வேண்­டிய இடத்­துக்கு டாக்­சியை ஓட்­டி­னார். யூசோஃப் தம்மை மான­பங்­கம் செய்­தது குறித்து அப்­பெண் பிறகு போலி­சில் புகார் செய்­தார். அந்­தப் பெண்­ணைத் தாம் தொட­வில்லை என்­றும் அவர் செல்­ல­வி­ருந்த இடத்தை அடைந்­த­தும் அவ­ரைக் கூப்­பிட்டு எழுப்ப முயன்­ற­தா­க­வும் யூசோஃப் வாதிட்­டார். பிறகு டாக்­சி­யை­விட்டு இறங்கி பின் கத­வைத் திறந்து எழுந்­தி­ருக்­கு­மாறு அப்­பெண்­ணி­டம் கூறி­ய­தாக யூசோஃப் தெரி­வித்­தார். அதை­ய­டுத்து, அப்­பெண் தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­த­தாக அவர் கூறி­னார். பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் வாக்­கு­மூ­லம் மாறு­பட்­டி­ருந்­தது. மேலும் சம்­ப­வம் நடந்­ததை நேரில் கண்ட சாட்­சி­களும் இல்லை.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் வாக்­கு­மூ­ல­மும் அவர் முன்­வைத்த ஆதா­ரங்­களும் நம்­ப­கமா­ன­தாக இருந்­த­தாக நீதி­பதி தெரி­வித்­தார்.

தீர்ப்பை எதிர்த்து யூசோஃப் மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு $10,000 பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.