இறுதிச் சடங்கில் 200 பேர்; 14 பேர் கைது

இறுதிச் சடங்கில் 200 பேர்; 14 பேர் கைது

1 mins read
e7ca3c0f-34b6-423f-8590-8ef6119a3b37
-

நேற்று முன்­தி­னம் பூன் லே வட்­டா­ரத்­தில் நடை­பெற்ற இறு­திச் சடங்­கில் ஏறத்­தாழ 200 பேர் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் சிலர் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

கொவிட்-19 சூழலை முன்­னிட்டு இறுதிச் சடங்­கில் அதி­க­பட்­சம் 20 பேர் மட்­டும் கலந்­து­கொள்­ள­லாம் என்ற விதி­முறை மீறப்­பட்­டது. குண்­டர் கும்­பல் உறுப்­பி­னர்­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில் இறு­திச் சடங்­கில் கலந்துகொண்­ட­வர்­களில் 14 பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. புளோக் 191 பூன் லே டிரை­வில் பிற்­ப­கல் 1 மணி அள­வில் கூட்­டம் திர­ளத் தொடங்­கி­ய­தா­க­வும் இரவு 7 மணி வரை இறு­திச் சடங்கி நடந்­த­தா­க­வும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கூறி­னர்.

குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தைச் சுற்றி ஒரு மணி நேரத்­துக்கு இறுதி ஊர்­வ­லம் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அதில் கலந்­து­கொண்­ட­வர்­கள் சத்­தம் போட்டு முழக்­க­மிட்­ட­தா­க­வும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.