செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
85444048-5ea3-4e24-bf93-b2054fb7315d
-

ரெட்ஹில் சந்தை, உணவு மைய

கடைக்காரர்களுக்கு கட்டாய பரிசோதனை

ரெட்ஹில் சந்தை, உணவு மையத்திற்கு கிருமித்தொற்றுள்ள ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து கடைக்காரர்களும் கட்டாய

கொவிட்-19 கிருமி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பரபரப்பான இந்த மையத்தில் வேலை செய்பவர்கள், இங்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது என்று ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கூறினார். ரெட்ஹில் லேன், புளோக் 84Aல் அமைக்கப் பட்டுள்ள தற்காலிக பரிசோதனை மையத்தில் நேற்றும் இன்றும் பரிசோதனைகள் இடம்பெறும் என்று திரு யோங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை செயல்முறைகளை சரிபார்க்கவும், அண்மைய நிலவரம் குறித்து கடைக்காரர்களுக்குத் தெரி விக்கவும் புக்கிட் மேரா கடை உரிமையாளர்கள், உணவங் காடி சங்கத்தின் தலைவருடன் நேற்று பிற்பகல் தற்காலிக பரிசோதனை மையத்தைப் பார்வையிட்ட திரு யோங், பரிசோதனை செய்துகொள்வது பொறுப்பான செயல் என்பதை கடைக்காரர்கள் ஒத்துக்கொண்டதாகக் கூறினார்,

ஜூன் 8ஆம் தேதிக்கும் 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்டவர் ரெட்ஹில் சந்தை, உணவு மையத்துக்குச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியது. ரெட்ஹில் சந்தை, உணவு மையத்திற்கும் புதிய கிருமித் தொற்று குழுமமான புக்கிட் மேரா வியூ சந்தை, உணவு அங்காடிக்கும் இடையே தூரம் பத்து நிமிட நடை பயணம்தான்.

சமூகத்தில் 14 புதிய தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி, 14 புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் 62,315 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஐவருக்கு மற்ற கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பில்லை. ஒன்பது பேர் ஏற்கனவே கிருமி தொற்றியோருடன் தொடர்புடையவர்கள். இவர்களில் ஐவர் முன்கூட்டியே தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நான்கு பேருக்கு கண்­காணிப்புச் சோத­னை­க­ளின்­போது கிரு­மித்தொற்று கண்­டு­பிடிக்­கப்­பட்­டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இடையிலும் புதிய தொற்றுச் சம்பவம் இல்லை. நேற்று முன்தின நிலவரப்படி 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

79 வயது 'ஏஓ சர்வீஸ் புரோ' நிறுவன ஊழியருக்கு பரிசோதனை

பாதிக்கப்பட்ட 'ஏஓ சர்வீஸ் புரோ' ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியரான 79 வயது துப்புரவுப் பணியாளருக்கு கொவிட்-19 கிருமி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கிளெமென்டி அவென்யூ 4, எண்கள் 375, 376ல் பணிபுரியும் அந்த முதியவர் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத ஒருவர்.

திங்கள் அன்று மொத்த ஒன்பது ஊழியர்கள் கிருமி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் மூவர் ஒரே நாளில் தனிமைப்படுத்தல் உத்தரவு இடப்பட்டவர்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

மீதமுள்ள ஆறுவரும் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் பணிபுரிந்ததால் நிறுவனம் அவர்களைப் பரிசோதனைக்கு அனுப்பியது. அவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதி யானது. சுமார் 550 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனம் வழக்கம் போலவே செயல்படுவதாக கூறப்பட்டது.

தேசிய பூங்காக் கழகம் நடவடிக்கை

கடல் வாழ் உயிரினங்களை கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாகக் கையாள்வதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தேசிய பூங்காக் கழகம் அறிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் குறைந்த அலைகளின் போது சாங்கி கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகரித்திருந்தது.

தேசிய பூங்காக் கழக ஊழியர்கள், தொண்டூழியர்கள், இயற்கை ஆர்வலர் குழுக்களின் கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்று கழகத்தின் தேசிய பல்லுயிர் மையத்தின் குழும இயக்குனர் திரு ரியான் லீ கூறினார்.