சீனாவிற்காக உளவுபார்த்த சிங்கப்பூரருக்குத் தடுப்புக்காவல்

சீனாவிற்காக உளவுபார்த்த சிங்கப்பூரருக்குத் தடுப்புக்காவல்

3 mins read
af1aeb6b-5999-4dd4-a512-2d757f3eaa4e
-

கடந்த 2015ஆம் ஆண்­டில் இருந்து சீனா­விற்­காக உள­வு­பார்த்த சிங்­கப்­பூர் ஆட­வர் ஈராண்டு தடுப்­புக்­கா­வ­லில் வைக்கப்பட்டுள்ளார்.

டிக்­சன் இயோ, 40 (படம்) என்ற இந்த ஆட­வர் பணத்­திற்­காக வெளி­நாட்­டிற்கு உள­வு­பார்த்­த­தாக உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு நேற்று தெரி­வித்­தது.

சீனா­விற்­காக உள­வு­பார்த்­த­தற்­காக அமெ­ரிக்­கா­வில் இயோ 14 மாதம் சிறை­வா­சத்தை அனு­ப­வித்­தார். அதன்­பின் சிங்­கப்­பூ­ருக்கு நாடு­க­டத்­தப்­பட்ட அவரை உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு கடந்த டிசம்­பர் 30ஆம் தேதி கைது செய்­தது. அதன்­பின் இவ்­வாண்டு ஜன­வரி 29ஆம் தேதி உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் அவர்­மீது தடுப்­புக்­கா­வல் ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

"வெளி­நாடு ஒன்­றின் உள­வுத்­து­றைக்­காக இயோ வேலை செய்­ததை விசா­ர­ணை­கள் உறு­திப்­ப­டுத்­தின. பணத்­திற்­காக வெளி­நாட்­டுக் கையாள்­க­ளு­டன் அவர் பல வேலை­க­ளைச் செய்­துள்­ளார்," என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் தொடர்­பான தக­வல்­களைத் திரட்­டித் தரும்­ப­டி­யும் இவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது. அதற்­காக இவர் சிங்­கப்­பூ­ரில் பல­ரை­யும் அணுகி, தக­வல்­க­ளைப் பெற முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

தமது தக­வல் திரட்டு நட­வ­டிக்­கை­களை மறைப்­ப­தற்­காக இயோ இங்கு ஒரு நிறு­வ­னத்­தை­யும் நிறு­வி­னார்

"தமது தக­வல் சேக­ரிப்பு நட­வடிக்­கை­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக சிங்­கப்­பூர் அர­சாங்­கப் பணி­யி­லும் இயோ சேர முயன்­றார். ஆனால், அது தோல்­வி­யில் முடிந்­தது. 2016ஆம் ஆண்­டில் இருந்து, 2019ல் அமெ­ரிக்­கா­வில் கைது செய்­யப்­ப­டும்­வரை அவர் இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்," என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு விளக்­கி­யது.

விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன என்­றும் இயோ­வின் நட­வ­டிக்­கை­கள் குறித்து முழு­மை­யாக அறிய அவர் தொடர்ந்து தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என்­றும் அவ்­வ­மைப்பு குறிப்­பிட்­டது.

2015ல் பெய்­ஜிங் சென்­றி­ருந்­த­போது, ஆய்­வுக்­கு­ழுக்­க­ளைப் பிரதி­நி­திப்­ப­தா­கக் கூறிக்­கொண்ட சீன முக­வர்­க­ளால் இயோ பணி­ய­மர்த்­தப்­பட்­டார். அப்­போது, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் லீ குவான் இயூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யில் இயோ முனை­வர் பட்­டம் பயின்று வந்­தார்.

அர­சி­யல் அறிக்­கை­கள், தக­வல்­களை வழங்­கு­வ­தற்­கா­கப் பணம் பெற்­றதை இயோ ஒப்­புக்­கொண்­டதை அமெ­ரிக்க நீதி­மன்ற ஆவ­ணங்­கள் காட்­டு­கின்­றன. முத­லில் தென்­கி­ழக்­கா­சியா மீதும் பின்­னர் அமெ­ரிக்­கா­வின் மீதும் இவ­ரது கவ­னம் இருந்­தது.

தம்­மு­டன் தொடர்­பி­லி­ருந்த சீன முக­வர்­க­ளைச் சந்­திப்­ப­தற்­காக இவர் பல­முறை பய­ணம் செய்­தார். 'ரெசொல்­யூட் கன்­சல்ட்­டிங்' எனும் புகழ்­பெற்ற அமெ­ரிக்க நிறு­வ­னத்­தின் பெய­ரில் போலி ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்­றைத் தொடங்­கு­மாறும் இவர் பணிக்­கப்­பட்­டார்.

2018 தொடக்­கத்­தில் சிங்­கப்­பூரில் அந்­நி­று­வ­னத்­தைப் பதி­வு­செய்த இயோ, 400க்கும் மேற்­பட்ட தன்­வி­வ­ரக் குறிப்­பு­க­ளை­யும் பெற்­றார். அவை பெரும்­பா­லும் அமெ­ரிக்க ராணு­வத்­தி­னர், அர­சாங்­கப் பணி­யா­ளர்­க­ளி­னு­டை­யவை எனக் கூறப்­பட்­டது.

பின்­னர் வாஷிங்­ட­னில் உள்ள ஜார்ஜ் வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வேலை கிடைக்க, தமது உளவு நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்­வ­தற்­காக இயோ அங்கு சென்­றார்.

2019 ஜன­வரி முதல் 2019 ஜூலை­ வரை இயோ வாஷிங்­ட­னில் வசித்­தார். அப்­ப­கு­தி­யில் இருந்­த­படி, தக­வல்­க­ளைப் பெறு­வ­தற்­காக, தனி­ந­பர்­களை அடை­யா­ளம் கண்டு, அணு­கும் முயற்­சி­களில் இவர் இறங்­கி­னார்.

பின்­னர் 2019 நவம்­ப­ரில் அமெ­ரிக்கா திரும்­பி­ய­போது, நியூ­யார்க் ஜான் எஃப் கென்­னடி விமான நிலை­யத்­தில் இயோ­வி­டம் குடி­நுழைவு அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

அத­னால் அச்­ச­ம­டைந்த இயோ, மறு­நாளே சிங்­கப்­பூர் திரும்ப விமா­னத்­திற்கு முன்­ப­திவு செய்­தார். அப்­போது, அமெ­ரிக்­கப் புல­னாய்­வுத் துறை (எஃப்பிஐ) அதி­கா­ரி­கள் இவரை அணுக, விசா­ர­ணைக்கு ஒத்­துக்­கொண்­டார். அதைத் தொடர்ந்து இவர் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

அமெ­ரிக்­கா­வில் இயோ கைதா­னது, குற்­றத்தை ஒத்­துக்­கொண்­டது குறித்த செய்தி கடந்த ஜூலை­யி­லும் தண்­டனை விதிக்­கப்­பட்ட செய்தி கடந்த அக்­டோ­ப­ரி­லும் வெளி­யா­யின.

"வெளி­நாட்டு அர­சு­டன் ரக­சிய உற­வு­கொண்டு, அதன் கட்­ட­ளைப்­படி நமது தேசப் பாது­காப்­புக்­கும் நலன்­க­ளுக்­கும் குந்­த­கம் விளை­விக்­கும்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களில் எவ­ரே­னும் ஈடு­ப­டு­வ­தைச் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் மிகக் கடு­மை­யா­ன­தாக எடுத்­துக்­கொள்­ளும்," என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு எச்­ச­ரித்து இருக்­கிறது.