நான்கு நிதி நிறுவனங்களுக்கு நாணய ஆணையம் எச்சரிக்கை

நான்கு நிதி நிறுவனங்களுக்கு நாணய ஆணையம் எச்சரிக்கை

1 mins read
c5824bb8-f2af-4690-ba3d-08b434327932
-

முத­லீட்­டுத் திட்­டங்­கள் விற்­பனை, தரகுத்தொகை தொடர்­பில் விதி மீறி­ய­மைக்­காக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், நான்கு நிதி நிறு­வனங்­க­ளைக் கண்டித்துள்ளது.

ஏஐஏ நிதி ஆலோ­ச­கர்­கள் (AIA FA), புரு­டென்­சி­யல் காப்­பு­றுதி நிறு­வ­னம் சிங்­கப்­பூர், அவிவா, அதன் துணை நிறு­வ­ன­மான அவிவா நிதி ஆலோ­ச­கர்­கள் (Aviva FA) ஆகிய நான்கு நிறு­வ­னங்­களும் இடர் நிர்­வா­கம், மேற்­பார்­வை­யா­ளர் வெகு­மதி தொடர்­பான ஒழுங்­கு­வி­தி­களை மீறி­விட்­ட­தாக நாணய ஆணை­யம் தெரி­வித்­தது.

ஒழுங்­கு­வி­தி­களை மீறி வெகு­மதி பெற்­ற­தற்­காக அவிவா நிறு­வன ஆலோ­ச­கர் பீட்­டர் டான் ஷோவ் யீயை­யும் தமது அலு­வ­ல­கப் பொறுப்­பு­களை நிறை­வேற்­றத் தவ­றி­ய­தற்­காக அவிவா எ­ஃப்ஏ நிறு­வனத்­தின் தலைமை நிர்­வாகி­யும் இயக்­கு­ந­ரு­மான லய­னல் சீ பூன் சாயை­யும் ஆணை­யம் கண்­டித்­து இருக்கிறது.

இத்­த­கைய கடிந்­துரை, நாணய ஆணை­யத்­தால் விடுக்­கப்­பட்ட கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ஒரு நிதி நிறு­வ­னத்­தின் ஒழுங்­கு­முறை விதி­மீ­றல், அதன் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டத்­தில் நிதி­சார்ந்த எந்­த­வொரு நேரடி பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தா­த­போது இத்­த­கைய கடிந்­துரை பிறப்­பிக்­கப்­படும்.

அந்த நிதி நிறு­வ­னங்­கள் எதிர்­கா­லத்­தி­லும் விதி­மீ­றல்­களில் ஈடு­பட்டு, நாணய ஆணை­யம் அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கும்­போது, இந்த எச்­ச­ரிக்­கை­கள் கணக்­கில் கொள்­ளப்­படும்.

அந்­தக் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் விதி­மீ­றல்­களில் ஈடு­பட்­ட­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டதை அடுத்து, விசா­ரணை நடத்­தி­ய­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. நிதி ஆலோ­ச­கர்­கள் சட்ட விதி­களுக்கு முர­ணாக, மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்­குப் பல­முறை வெகு­மதி வழங்­கப்­பட்­டது விசா­ர­ணை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.