கொவிட்-19 பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளை அடுத்து, கடந்த மாதம் புதிய தனியார் வீடுகள் விற்பனை கிட்டத்தட்ட 30% குறைந்தது.
இவ்வாண்டு ஏப்ரலில் 1,268 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்ட நிலையில், அதற்கடுத்த மே மாதத்தில் 891 வீடுகளே விலைபோயின. இருப்பினும், 2020 மே மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு மேயில் அத்தகைய வீடுகளின் விற்பனை 83% கூடியது.
எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்தால், 1,230 புதிய வீடுகள் கடந்த மாதம் விற்கப்பட்டன. முந்திய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இது 8.8% குறைவு.
'தி வாட்டர்கார்டன்ஸ்', பார்க் கிரீன்விச், கிலிம்ட் கெய்ன்ஹில், பாசிர் ரிஸ் 8 ஆகிய புதிய தனியார் வீடமைப்புத் திட்டங்கள் வரும் ஜூலையில் அறிமுகமாகவுள்ளன.

