உட்கூரை பெயர்ந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் காயம்

உட்கூரை பெயர்ந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் காயம்

1 mins read
aef70abf-248b-4b3d-8107-e39a6aa8e96d
-

தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தீய­ணைப்பு வீரர்­கள் மீது உட்கூ­ரை­யின் சில பகு­தி­கள் பெயர்ந்து விழுந்­தன.

ஊட்­ரம் பார்க்­கில் 31 டியோ ஹாங் சாலை என்ற முக­வ­ரி­யில் அமைந்­துள்ள கடை­வீட்­டில் தீப்­பற்­றி­ய­தாக நேற்று முற்­ப­கல் 11.15 மணி­ய­ள­வில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­குத் தக­வல் வந்­தது.

சம்­பவ இடத்­திற்கு விரைந்து சென்ற தீய­ணைப்­புப் படை­யி­னர், அந்­தக் கடை­வீட்­டில் இருந்து கரும்­புகை எழுந்­த­தைக் கண்­ட­னர். அதனால், மூச்­சுக்­க­ருவி அணிந்­து­கொண்டு தீய­ணைப்பு வீரர்­கள் அந்த வளா­கத்­தி­னுள் நுழைந்­த­னர்.

உட்கூரை பெயர்ந்து விழுந்­த­போது அவ்­வீட்­டின் மூன்­றாம் தளத்­தில் தீய­ணைப்பு வீரர்­கள் இரு­வர் இருந்­த­னர். அவர்­கள் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்டு, துணை மருத்­து­வப் படை­யி­ன­ரால் பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர்.

சுய­நி­னை­வு­டன் இரு­வர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். இலே­சான சிராய்ப்புக் காய­ம் அடைந்த இன்­னொ­ரு­வர்க்கு அங்­கேயே சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

அந்­தக் கடை­வீட்­டின் மூன்­றாம் தளத்­தை­யும் பர­ணை­யும் சூழந்த தீ, பிற்­ப­கல் 1.15 மணி­வாக்­கில் முழு­மை­யாக அணைக்­கப்­பட்­டது.

தீப்­பற்­றி­யதை அடுத்து அவ்­வீட்­டில் இருந்­த­வர்­கள் தாங்­களே வெளி­யே­றி­விட்­ட­தா­க­வும் முன்­ எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அண்டை வீடு­களில் இருந்த 20 பேரைக் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வெளி­யேற்­றி­ய­தா­க­வும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழி­யா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

தீ விபத்­துக்­கான கார­ணம் ஆரா­யப்­பட்டு வரு­கிறது.