முகக்கவசம் அணியாதவர் மீது மேலும் குற்றச்சாட்டு

முகக்கவசம் அணியாதவர் மீது மேலும் குற்றச்சாட்டு

1 mins read
c7ec074b-1730-43ff-a3d3-8e0115342507
-

மரினா பே சேண்ட்ஸ் ஒருங்­கிணைந்த உல்­லா­சத்­த­ளத்­தில் முகக்­க­வ­சம் அணிய மறுத்த பெண் மீது மேலும் பல குற்­றச்­சாட்­டு­கள் விதிக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அக்குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்படவில்லை.

இப்­போ­தைக்கு, மரினா பே சேண்ட்ஸ், பிராஸ் பசா வணிக வளா­கம் போன்ற பொது இடங்­களி­லும் நீதி­மன்­றக் கட்­ட­டத்­திற்கு வெளி­யி­லும் முகக்கவ­சம் அணி­யத் தவ­றி­யது உள்­ளிட்ட ஏழு குற்­றச்­சாட்­டு­களை, பூன் சியு யோக், 53 (படம்) என்ற இம்­மாது எதிர்­நோக்­கி­யுள்­ளார்.

பூன் சார்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகவில்லை.

இந்­நி­லை­யில், தம் மீதான குற்­றச்­சாட்­டு­களைக் கைவிடக் கோரி விண்­ணப்­பிக்க விரும்­பு­வ­தாக பூன் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

தாம் ஒரு முன்­னாள் கடற்­படை அதி­காரி என வலி­யு­றுத்­திக் கூறிய ஃபூன், சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தொடர்­பான முன்­னைய வழக்­கு­களில் தாம் ஒரு சாட்­சி­யாக அல்­லது வாதி­யாக இருந்­துள்­ள­தா­க­வும் இந்த வழக்கு­களால் தாம் நியா­ய­மான விசா­ரணையை எதிர்­நோக்­கு­வது கடி­னம் என்­றும் குறிப்­பிட்­டார்.

ஆனால், முன்­னைய வழக்­கு­களுக்­கும் அவர் மீதான இப்­போ­தைய குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் தொடர்­பில்லை என்று நீதி­பதி ஜேனட் வாங் குறிப்பிட்டார்.

கடந்த மே 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட பூன், பின்னர் $8,000 பிணைத்தொகையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.