சிங்கப்பூர் நீரிணையில் இந்தியக் கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு

மூழ்­கிய கப்­பல்­கள் இரண்­டின் சிதை­வு­கள் சிங்­கப்­பூர் நீரி­ணை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­த­லா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள பல­நூற்­றாண்டு பழ­மை­வாய்ந்த கப்­பல் சிதை­வு­கள் இவை. சிங்­கப்­பூ­ரின் கடல்­துறை மர­பு­டை­மை­யில் மைல்­கல் சாத­னை­யாக இந்­தக் கண்­டு­பி­டிப்பு விளங்­கு­கிறது. சீன கைவி­னைப் பொருட்­களை இக்­கப்­பல்­கள் கொண்டு சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இவற்­றின் சிதை­வு­கள், பாறை­கள் நிறைந்த ஆழ­மில்லா நீர்ப்­ப­கு­தி­யில் உள்ள பெட்ரா பிரங்­கா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு கப்­ப­லின் சிதைவை ஆராய்ந்­த­தில், இந்­தி­யா­வில் கட்­டப்­பட்ட 'ஷா முன்ஷா' பய­ணக் கப்­பல் அது என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 1796ல் சீனா­வின் குவாங்­டோங் நக­ரி­லி­ருந்து இந்­தி­யா­வின் அப்­போ­தைய பம்­பாய் நக­ருக்­குச் சென்­று­கொண்­டி­ருந்த அந்­தக் கப்­பல் மூழ்­கி­யது.

இந்­தக் கப்­பல் பெட்ரா பிரங்கா தீவின் கிழக்கே 300 மீட்­டர் தொலை­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பொருட்­களில் இந்­திய இதி­கா­சங்­களில் குறிப்­பி­டப்­படும் 'மக­ரம்' என்ற மீனின் வடி­வம் கொண்ட சுட்­டாங்­கல் (ceramic) சிற்­பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் 'மெர்­ல­யன்' சின்­னத்தை வடி­வ­மைத்­த­வர் மக­ரத்­தைக் கண்­டு­தான் அவ்­வாறு செய்­தி­ருக்க வேண்­டும் என்று கடல்­துறை தொல்­பொ­ருள் ஆய்­வா­ளர் மைக்­கல் ஃபிளெக்­கர் தெரி­வித்­தார்.

இது உட்­பட சிதை­வு­க­ளி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பல்­வேறு பொருட்­கள் இவ்­வாண்­டின் இறுதி முதல் சிங்­கப்­பூ­ரின் அரும்­பொ­ரு­ள­கங்­களில் காட்­சிக்கு வைக்­கப்­படும். இரண்டு கப்­பல் சிதை­வு­க­ளி­லி­ருந்து பொருட்­களை மீட்­கும் பணியை மேற்­பார்­வை­யிட்ட திரு ஃபிளெக்­கர், முதல் சிதை­வின் கண்­டு­பி­டிப்பு அற்­பு­த­மா­னது என்­றார். அந்­தச் சிதைவு, 1300 முதல் 1600 ஆண்­டு­கள் வரை தெமா­செக் என்ற பெய­ரைக் கொண்­டி­ருந்த பழங்­கா­லத்து சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­தது.

மற்­றொரு மீட்­புத் திட்­டத்­தில் 2015ஆம் ஆண்டு ஈடு­பட்­டி­ருந்த முக்­கு­ளிப்­பா­ளர்­கள் சிலர், சில சுட்­டாங்­கல் தட்­டு­க­ளைக் கண்­டு­பி­டித்­ததை அடுத்து அவற்றை 'ஐசீஸ்-யூசோஃப் இஷாக்' ஆய்­வுக் கழ­கத்­தி­டம் ஒப்­ப­டைத்­த­னர். அந்­தத் தட்­டு­கள் 14ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­தவை என்று ஆய்­வுக் கழ­கம் கூறி­யது.

இந்­தக் கண்­டு­பி­டிப்பை அடுத்து அக்­க­டற்­ப­கு­தி­யில் அக­ழாய்­வுத் திட்­டம் 2016ஆம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அந்­தத் திட்­டம் தற்­போது ஆறா­வது ஆண்­டாக நடந்து வரு­கிறது.

தீவின் வட­மேற்கு திசை பக்­கம் அந்­தச் சிதைவு கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தேசிய மர­பு­டைமை நிலை­ய­மும் 'ஐசீஸ்-யூசோப் இஷாக்' ஆய்­வுக் கழ­க­மும் நேற்று அறி­வித்­தன. இந்­நி­லை­யில் 2019ஆம் ஆண்­டில் பெட்ரா பிரங்கா தீவுக்கு அருகே செய்­யப்­பட்ட ஒரு சோத­னை­யில் இரண்­டா­வது சிதைவு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

'மக­ரம்' சிற்­பம் தொடர்­பில்...

"தென்­கி­ழக்­கா­சிய சிற்­ப­ம் மக­ரம். இந்­தி­யா­வில் 'மக­ரம்' என்­பது மீன் போன்ற வடி­வத்­தில் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கிறது. சீனா­விலோ மக­ரத்­தின் தலை, கடல்­நாகத்­தின் தலை போல இருக்­கும். ஷா முன்ஷா கப்­பல் சிதை­வு­களில் கிடைத்த மக­ரம் மீது சிவப்பு, பச்சை, மஞ்­சள் நிற எண்­ணெய் சாயம் பூசப்­பட்­டுள்­ளது. இந்த வண்­ணங்­கள் தேய்ந்த நிலை­யில் உள்­ளன. இந்­தப் பொருள் இந்­தி­யச் சந்­தைக்­காக செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்," என்று டாக்­டர் ஃபிளெக்­கர் தெரி­வித்­தார்.

சீனா­வில் செய்­யப்­பட்ட மக­ரச் சிற்­பத்­திற்கு 300 ஆண்­டு­க­ள் முன்­னரே இந்­தி­யர்­க­ளி­டையே வர­வேற்பு இருந்­தது இதில் தெரி­ய­வந்­துள்­ளது.

கூடு­தல் செய்தி: கி. ஜனார்த்­த­னன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!