வெவ்வேறு இன, வெவ்வேறு வயதினரின் கல்வித் தேர்ச்சி பத்தாண்டுகளில் மேம்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி தொடர்பில் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உயர்நிலைக்கு அப்பாற்பட்ட கல்வித் தேர்ச்சி, அனைத்து வயதினரிடமும் மேம்பட்டிருந்தது. அத்துடன் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் ஆகிய முன்று பிரதான இனங்களிலும் கல்வி தொடர்பில் நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் 2020 கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டன.
பத்தாண்டுக்கு முன் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் பல்கலைக்கழக பட்டதாரிகளான இந்தியர்களின் எண்ணிக்கை 41.3% அதிகரித்துள்ளது. சீனர்களின் எண்ணிக்கை 34.7% மற்றும் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 10.8% என முறையே அதிகரித்துள்ளது.
உயர்நிலைக் கல்விக்குக் குறைவான தகுதியுடைய இந்தியர்கள் விகிதம், பத்தாண்டுக்கு முன்னர் இருந்த 23.8 விழுக்காட்டிலிருந்து 18.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

