அதிகமான சிங்கப்பூரர்களிடம் சமயசார்பற்ற நிலை காணப்படுகிறது

1 mins read
f1377cfb-d775-441e-961a-18a35fb9f4cf
-

பல்­வேறு சம­யங்­களை உள்­ள­டக்­கிய நாடாக சிங்­கப்­பூர் விளங்­கி­னா­லும் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் தற்­போது மேலும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே சம­ய­சார்­பற்ற நிலை உள்­ள­தாக மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு தெரி­வித்­துள்­ளது. வெவ்­வேறு கல்­வித் தகு­தி­யு­டை­யோர், வெவ்­வேறு இனத்­த­வர் ஆகி­ய­வர்­க­ளி­டம் இந்த அதி­க­ரிப்பு காணப்­ப­டு­கிறது. சம­ய­சார்­பற்ற அற்ற சிங்­கப்­பூர்­வா­சி­களின் விகி­தம் 2020ல் மூன்று விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருந்­தது.

இந்­தி­யர்­களில் தொடர்ந்து இந்து சம­யமே பெரு­வா­ரி­யான சம­ய­மாக (57.3%) இருந்­தது. அதை­ய­டுத்து இஸ்­லா­மிய (23.4%) சம­ய­மும் கிறிஸ்­தவ (12.6%) சம­ய­மும் இடம்­பெற்­றுள்­ளன. சம­ய­சார்­பற்ற நிலை இல்லை எனும் போக்­கைப் பெரும்­பா­லும் இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்­டுள்­ள­னர்.