ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்களில் மீண்டும் ஆர்வம்

ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்களில் மீண்டும் ஆர்வம்

1 mins read
33b6c8fe-a135-411c-af32-e1d35d1298a1
-

கொவிட்-19 தொடர்­பில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­களில் சில இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் தளர்த்­தப்­பட்­டன. இந்­நி­லை­யில் ஹோட்­டல்­களில் தங்­கு­வ­தி­லும் சுற்­று­லாத்­த­லங்­க­ளுக்­குச் செல்­வ­தி­லும் மக்­க­ளின் கவ­னம் மெல்­லத் திரும்பி­யுள்­ளது.

ஹோட்­டல்­கள், சுற்­று­லாத்­த­லங்­களுக்­கான முன்­ப­திவு எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தா­கக் கூறப்­படு­கிறது. இருப்­பி­னும், பல­ரும் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும் நாள், ஜூன் 21. உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பி­டு­வது அன்­று­மு­தல் மீண்­டும் தொடங்­க­வுள்­ளது.

கொரோனா கிரு­மிச்­சூ­ழல் இழைத்த பாதிப்­பி­லி­ருந்து சிங்­கப்­பூர் மீண்­டு­வ­ரும் பய­ணத்­திற்கு இந்­தக் கட்­டுப்­பாட்­டுத் தளர்வு முக்­கி­ய­மான ஒன்று என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே கிரு­மிச் சூழல் தொடர்­பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும் ஒரு சிலர், காத்­தி­ருந்து முடி­வெ­டுக்­கும் நிலை­யில் உள்­ள­தாக ஹோட்­டல் துறை­யி­னர் கூறு­கின்­றனர்.

வரும் வாரங்­களில் குடும்­பங்களுக்கு மேலும் வச­தி­யான அனு­ப­வங்­க­ளைத் தரு­வ­தில் ஹோட்­டல்­கள் கவ­னம் செலுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.