பரிசோதனைக் கருவிகள் விற்பனைக்கு வந்தன

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை சுய­மாக பரி­சோ­தித்­துக்­கொள்­வ­தற்­கான கருவி நேற்று முதல் சிங்­கப்­பூ­ரின் பெரிய மருந்­துக்­க­டை­களில் விற்­ப­னைக்கு வந்­துள்­ளது.

தீவு முழு­வ­தும் உள்ள 79 கார்டி­ யன் கடை­களில் இரு வெவ்­வேறு ஏஆர்டி விரைவு பரி­சோ­த­னைக் கரு­வி­கள் இருப்பு வைக்­கப்­பட்டு உள்­ளன.

அபாட், குவிக்­வியூ ஆகிய நிறு­வ­னங்­க­ளின் தயா­ரிப்­பு­கள் இவை. இவ்­வி­ரண்டு நிறு­வ­னங்­

க­ளின் பரி­சோ­த­னைக் கரு­வி­களும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டுள்­ள­தாக கார்­டி­யன் கடைத்­தொ­கு­தி­க­ளின் பேச்­சா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­தார்.

“இரண்டு கரு­வி­களைப் பயன்­

ப­டுத்­தும் முறை­யும் வெவ்­வே­றா­னவை என்­ப­தால் வாடிக்­கை­யா­ளர்­கள் கரு­வி­யு­டன் தரப்­படும் வழி­காட்­டுப் பிர­சு­ரத்­தைப் படித்து அதன்­படி பயன்­ப­டுத்த வேண்­டும்,” என்­றார் அவர்.

இவ்­வி­ரண்டு பரி­சோ­த­னைக் கரு­வி­களும் வாட்­சன் கடை­க­ளி­லும் யுனிட்டி கடை­க­ளி­லும்­கூட விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்டு உள்­ளன. இவற்­றின் விலை, சுகா­தார அமைச்­சின் பரிந்­து­ரைக்கு இணங்க $10 முதல் $13 வரை நிர்­ண­யிக்­கப்­பட்டு விற்­கப்­ப­டு­கிறது.

கார்­டி­யன் கடை­களில் அபாட் நிறு­வன பரி­சோ­த­னைக் கருவி $13க்கு விற்­கப்­ப­டு­கிறது. அதே கருவி யுனிட்டி கடை­களில் $12.80க்கும் வாட்­சன் கடை­களில் $13.10க்கும் விற்­கப்­ப­டு­கிறது. பத்து அல்­லது அதற்கு மேற்­பட்ட கரு­வி­களை வாங்­கும்­போது இதை­விட மலி­வான விலைக்கு அவை கிடைக்­கும். பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளின் விற்­பனை நேற்­றுக் காலை தொடங்­கி­ய­தும் ஜூரோங் ஈஸ்ட், புக்­கிட் பாஞ்­சாங், பொத்­தோங் பாசிர், தோ பாயோ ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள கார்­டி­யன், வாட்­சன், யுனிட்டி ஆகிய கடை­க­ளுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் சென்­ற­போது சிலர் அக்­க­ரு­வி­களை வாங்­கிச் செல்­வதை அவர்­க­ளால் காண­மு­டிந்­தது.

திரு­வாட்டி ஜே.பிர­வுன், 60, என்­ ப­வர் புக்­கிட் பாஞ்­சாங் பிளா­சா­வில் உள்ள வாட்­சன் மருந்­துக் கடை­யில் கொவிட்-19 பரி­சோ­த­னைக் கரு­வியை வாங்­கி­னார். வரும் செப்­டம்­பர் மாதம் பிரிட்­ட­னுக்­குத் திரும்­பிச் செல்­லும் தமது குடும்­பத்­தி­ன­ருக்­காக இக்­க­ரு­வியை வாங்­கி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

“நமக்­கென்று ஒரு கருவி இருக்­கும்­போது பரி­சோ­தனை நிலை­யத்தை நாடிச் செல்­ல­வேண்­டிய அவ­சி­யம் நேராது,” என்று கூறிய அந்த மாதின் கண­வர் எண்­ணெய் மற்­றும் எரி­வாயு நிறு­வ­னம் ஒன்­றி­லும், மகள் பள்­ளிக்­கூ­டம் ஒன்­றி­லும் வேலை செய்­கின்­ற­னர்.

“சிங்­கப்­பூ­ரை­விட்­டுப் புறப்­ப­டு­

வ­தற்கு ஒன்று அல்­லது இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக நம்மை நாமே பரி­சோ­த­னைக் கருவி கொண்டு சோதித்­துப் பார்த்து முடி­வைத் தெரிந்­து­கொள்­வ­தன் மூலம் விமான நிலை­யத்­தில் ஏற்­படும் அசௌ­க­ரி­யத்­தைத் தவிர்க்­க­லாம். குறைந்­த­பட்­சம் 90 விழுக்­காடு முடிவை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடி­யும்,” என்­றார் அவர்.

கொவிட்-19ஐ அறியும் கருவியின் விலை $10 முதல் $13 வரை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!