தடுப்பூசி மோசடிகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தடுப்பூசி மோசடிகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

2 mins read
d888aee5-9857-4dce-81ad-b4b85beeb39f
-

கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் காலத்­தில் சிங்­கப்­பூ­ரில் பொது­மக்­க­ளைக் குறி­வைத்­துத் தொடர்ந்து மோசடி செய்து வந்த கும்­பல்­க­ளின் கவ­னம் தற்­போது தடுப்­பூ­சி­யின் பக்­கம் திரும்பி உள்­ளது.

அண்­மைக் கால­மாக சீனா­வி­லி­ருந்து அதி­கா­ரி­கள் பேசு­வ­து­போல இங்­குள்ள மக்­கள் தவறு செய்­த­தாக மிரட்டி ஆள்­மா­றாட்ட மோசடி செய்த சம்­ப­வங்­கள் பற்றி புகார்­கள் செய்­யப்­பட்­டன.

கிட்­டத்­தட்ட அதே மாதி­ரி­யான மோசடி நட­வ­டிக்­கை­களில் சில கும்­பல்­கள் ஈடு­பட்டு வரு­கின்­றன.

தனது அமைச்­சின் அதி­கா­ரி­கள் போல பேசி தடுப்­பூசி தொடர்­பான மோச­டி­கள் செய்­யப்­பட்டு வரு­வ­தாக இவ்­வாண்­டின் தொடக்­கத்­தி­லேயே சுகா­தார அமைச்சு எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது.

தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்ய உத­வு­வ­து­போல அந்த மோசடிப் பேர்­வ­ழி­கள் முன்­வ­ரு­கி­றார்­கள் என்­றும் அவர்­கள் பயன்­ப­டுத்­தும் இணை­யத்­த­ளங்­கள், மின்­னஞ்­சல் முக­வ­ரி­கள், குறுந்­த­க­வல்­கள் மற்­றும் தொலை­பேசி அழைப்­பு­கள் ஆகி­யன பற்றி தான் அறிந்­தி­ருப்­ப­தாகவும் அமைச்சு கூறி­யி­ருந்­தது.

ஆக அண்­மை­யில் மோச­டி­யைச் சந்­தித்த ஒரு­வர், மோச­டிக்கு எதி­ரான scamalert.sg என்­னும் அர­சாங்க இணை­யத்­த­ளத்­தில் புகார் ஒன்­றைப் பதிவு ெசய்­தி­ருந்­தார். தேசி­யக் குற்­றத் தடுப்பு மன்­றம் இந்த இணை­யத்­த­ளத்தை நிர்­வ­கிக்­கிறது.

மே 19ஆம் தேதி பதிவு செய்­யப்­பட்ட அந்­தப் புகா­ரில், சுகா­தார அமைச்­சி­ல் இருந்து பேசு­வ­து­போல மர்ம நபர் தொடர்­பு­கொண்டு தடுப்­பூசி பெறு­வ­தற்கு உதவி செய்­ வ­தா­க­வும் அதற்­காக தொலை­

பே­சி­யில் '9' என்­னும் எண்ணை அழுத்­து­மா­றும் தம்­மைக் கேட்­டுக்­கொண்­டா­கக் கூறி­னார்.

அந்­தத் தானி­யக்க குரல் தக­வல் ஆங்­கி­லம், மலாய் ஆகிய மொழி­களில் இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தாம் ஏற்­கெ­னவே இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்ட பின்­னர் இது­போன்ற அழைப்பு வந்­த­தால் சந்­தே­க­ம­டைந்து புகார் தெரி­விப்­ப­தாக அவர் கூறி­னார்.

இது­போன்ற மோச­டி­களில் பொது­மக்­களை நம்ப வைப்­ப­தற்­காக மோச­டிக்­கா­ரர்­கள் பல உத்­தி­ களைப் பின்­பற்­று­வ­தாக காவல்­

து­றை­யின் உள­வி­யல் சேவைப் பிரிவு முதன்மை உள­வி­யல் நிபு­ண­ரான திரு­வாட்டி கேரொலின் மிசிர் தெரி­வித்துள்­ளார்.

தடுப்­பூசி தொடர்­பான குறிப்பு எண்­ணை­யும் ரெம்­டெ­சி­விர் போன்ற நோய் எதிர்ப்பு மருந்­தைப் போன்ற ஒன்­றை­யும் சொல்லி நம்­ப­கத்­தன்­மையை ஏற்­ப­டுத்த மோச­டிக்­கா­ரர்­கள் முய­லக்­கூ­டும் என்­றார் அவர்.

தடுப்­பூசி தொடர்­பான மோச­டி­கள் பற்றி காவல்­துறை அறிந்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

மேலும் இம்­மோ­ச­டி­களில் சிலர் பணம் இழந்­தி­ருப்­ப­தை­யும் தான் அறிந்­தி­ருப்­ப­தாக அந்த செய்­தித்­தாள் குறிப்­பிட்­டுள்­ளது.