'வரிவிதிப்பு சீர்திருத்தத்திற்கு உலக கருத்திணக்கம் தேவை'

'வரிவிதிப்பு சீர்திருத்தத்திற்கு உலக கருத்திணக்கம் தேவை'

1 mins read
6500d23c-fc6b-4b7b-abca-09422e1a64cb
-

உலக வரி­விதிப்பு மு­றையை சீர்­தி­ருத்­தம் செய்­வ­தற்­கான நட­வடிக்­கை­யும் உல­க­ளா­விய குறைந்­த­பட்ச நிறு­வன வரி விகி­த­மும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­யதே என்­ற­போ­தி­லும் இதற்­கான முடி­வு­களை ஜி7 நாடு­கள் மட்­டும் எடுத்­து­விட முடி­யாது என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்த உல­க­ளா­விய கருத்­தி­ணக்­கத்­தில் சிறி­ய­தும் பெரி­ய­து­மான எல்லா நாடு­களும் ஈடு­பட வேண்­டி­யது அவசியம் என்­றார் அவர்.

இவ்­வாறு செய்­வது எல்லா வகை­யான நிபந்­த­னை­க­ளுக்கு மத்­தி­யில் வரி சீர்­தி­ருத்­தத்தை உறுதி செய்ய உத­வும் என்று நேற்று நடத்­தப்­பட்ட சிஎன்­பிசி உலக மாநாட்­டில் பேசும்­போது திரு வோங் குறிப்­பிட்­டார்.

வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த வரிவிதிப்பு உடன்­பாட்­டுக்கு உல­கின் பணக்­கார நாடு­க­ளின் அமைப்­பான ஜி7 ஒப்­பு­தல் வழங்­கிய ஒரு வார காலத்­திற்­குப் பிறகு சிங்­கப்­பூர் நிதி அமைச்­ச­ரின் கருத்து வெளி­யாகி உள்­ளது.

உல­கம் முழு­வ­தும் உள்ள வரி­வி­திப்புமுறையை ஒருங்­கி­ணைக்க அனைத்­து­லக அள­வி­லான ஆழ­மான ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கிறது என்­றார் அவர்.

"இங்கு இது­போன்ற புதிய விதி­கள் கொண்டு வரப்­ப­டின், உல­கக் கருத்­தி­ணக்­கத்­திற்கு ஏற்­ப­வும் இங்­குள்ள வர்த்­தக சமூ­கத்­தின் ஆலோ­ச­னைக்கு ஏற்­ப­வும் சிங்­கப்­பூர் தனது வரி­வி­திப்பு முறையை சரி­செய்­யக்­கூ­டும்", என்று குறிப்­பிட்­டார் திரு வோங்.