அமெரிக்க மின்சார கார் நிறுவ னமான டெஸ்லா, தோ பாயோவில் தனது சேவை நிலையத்தைத் திறக்க உள்ளது. முன்னர் டான் சோங் மோட்டார் நிறுவனம் நிசான் வாகனங்களின் விநியோகச் சேவையை நடத்தி வந்த இடத்தில் அச்சேவை நிலையம் அமைய இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது, 17 லோரோங் 8 தோ பாயோவில் ஜூலை மாதம் சேவை நிலையத்தை டெஸ்லா சிங்கப்பூர் திறக்கக்கூடும். இந்நிறுவனத்தின் 'மாடல் 3' கார்கள் இங்கு விற்பனைக்கு விடுப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் இங்கு விற்க
விருக்கும் ஒரே கார் இதுமட்டுமே. வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்திற்கு (சிஓஇ) முந்திய இதன் விலை $116,364. இதில் அதிக ஆற்றல் கொண்ட காரின் விலை $158,334 (சிஓஇ சேர்க்காமல்).
இருப்பினும் இங்கு இந்நிறு வனத்தின் கார் விற்பனை திட்ட மிடப்பட்டதைக் காட்டிலும் இரு மாதங்கள் முதல் ஆறு மாதங் கள் வரை தாமதமாகி உள்ளது. மின்னிலக்க சில்லுகளுக்கான உலகளாவிய பற்றாக்குறையே தாமதத்திற்கு முக்கிய காரணம். டெஸ்லாவின் முதல் கார்களுக் கான வாகன உரிமைச் சான்றி தழ் கட்டண ஏலம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. அநேகமாக அடுத்த மாதம் முதல் கார்கள் இங்கு விற்பனைக்கு கிடைக்கக் கூடும்.

