கொவிட்-19 விதிமீறல்: 20 உடற்பிடிப்பு நிலையங்களை மூட உத்தரவு

கொவிட்-19 விதிமீறல்: 20 உடற்பிடிப்பு நிலையங்களை மூட உத்தரவு

1 mins read
4bdfe8e4-24f2-4660-8966-5f25a1655b86
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறிய 20 உடற்­பி­டிப்பு நிலை­யங்­களை பத்து நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

காவல் துறை­யி­னர் மேற்­கொண்ட அம­லாக்­கச் சோத­னை­யின்­போது அந்­நி­லை­யங்­க­ளுக்கு வந்த வாடிக்­கை­யா­ளர்­களும் சேவை வழங்­கிய ஊழி­யர்­களும் முகக்­க­வ­சம் அணி­யா­தது கண்டு­ பி­டிக்­கப்­பட்­டது.

மேலும், முகக்கவ­சம் அணி­யு­மாறு வாடிக்­கை­யா­ளர்­களை உடற்­பி­டிப்பு நிலை­யங்­கள் கேட்டுக்­ கொள்­ளத் தவ­றின.

இக்­குற்­றங்­க­ளுக்­காக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தலா 300 வெள்­ளி­யும் நிலை­யங்­க­ளுக்கு தலா 1,000 வெள்­ளி­யும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தாக காவல் துறை நேற்று மாலை வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்துள்ளது.