இருவர் மீது மின்சாரம் பாய்ந்ததற்கான காரணத்தை நகரமன்றம் விளக்கியது

இருவர் மீது மின்சாரம் பாய்ந்ததற்கான காரணத்தை நகரமன்றம் விளக்கியது

2 mins read
85ff1ae2-fc00-497e-9a05-aff07fba6bcc
-

மின் விளக்­குக் கம்­பத்­தில் உள்ள மின் இணைப்­புக் கம்­பியை சுற்­றி­யி­ருந்த பொரு­ளில் ஏற்­பட்ட சேதமே தோ பாயோ லேரோங் 5, புளோக் 63 உட­லு­று­திப் பூங்­கா­வில் மின்­சா­ரம் பாயக் கார­ண­மாக இருந்­தது என்று பீஷான்-தோ பாயோ நக­ர­மன்­றம் கூறி­யுள்­ளது.

அந்த உட­லு­று­திப் பூங்­கா­வில் முக­மது மஸ்­லான், 34, என்­ப­வ­ரின் 10 வயது மகள் உதவி கேட்டு கத­று­வ­தைக் கேட்டு அவர் திடுக்­கிட்­டார்.

திரு மஸ்­லான் தமது மகன் மின் விளக்­குக் கம்­பத்­துக்கு அருகே மயங்கி விழு­வதை கண்­டார். அவ­ரது 14 வயது மகன் முக­மது ரிஃப்கி தோழன் ஒரு­வ­ரு­டன் காற்­பந்து விளை­யா­டிக் கொண்­டி­ருந்த போது அந்­தப் பந்து மின் விளக்­குக் கம்­பம் நோக்­கிச் சென்­றுள்­ளது.

அதை எடுக்­கப் போன ரிஃப்கி தான் விழா­மல் இருக்க மின்­கம்­பத்தை தாங்­கிப் பிடித்­துக் கொள்ள அவர் மீது மின்­சா­ரம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்­தார். அவ­ரைக் காப்­பாற்ற முயன்ற அவர் தோழ­னுக்­கும் அதே­போல் மின்­சா­ரம் பாய்ந்­தது. மஸ்­லான் தமது பைய­னைக் காப்­பாற்ற முயன்­ற­போது அவ­ரை­யும் மின்­சா­ரம் தாக்­கி­யது.

"எனது இத­யத்­தில் கூர்­மை­யான ஏதோ ஒன்று தாக்­கு­வது போல் உணர்ந்­தேன். அதைத் தொடர்ந்து மூச்­சு­தி­ண­றல் ஏற்­பட்­டது.

"எனது கையால் மகனை அங்­கி­ருந்து இழுத்து காலால் மெல்ல அவனை உதைத்து தள்­ளி­ய­போது எனது கை, கால் என இரண்டு இடங்­க­ளி­லும் மின்­சா­ரம் தாக்­கு­வதை உணர்ந்­தேன்.

"அப்­பொ­ழுது எனக்­குத் தோன்­றி­ய­தெல்­லாம் எனது மகன் இறக்க நேரிட்­டால், நானும் இறப்­பேன் என்­ப­து­தான்," என்று தமக்கு ஏற்­பட்ட அனுபவத்தை விவ­ரித்தார் திரு மஸ்­லான்.

ரிஃப்கி­யு­டன் விளை­யா­டிய அவ­னது தோழ­னுக்கு மின்­சா­ரம் பாய்ந்த உடனே அவ­னுக்கு ஏற்­பட்ட அதிர்ச்­சி­யில் அவன் அந்த இடத்­தை­விட்டு ஓடி­விட்­ட­தா­க­வும் மஸ்­லான் கூறு­கி­றார்.

இது­பற்­றிக் கூறும் நக­ர­மன்­றம் இந்த பிரச்­சினை சரி­செய்­யப்­பட்டு விட்­ட­தா­கக் கூறு­கிறது.

அந்­தப் பகு­தி­க்கு நேற்று சென்ற செய்­தி­யா­ளர்­கள் அங்­கி­ருக்­கும் மூன்று மின் விளக்­குக் கம்­பங்­க­ளை­யும் மாற்­று­வ­தைக் காண முடிந்­த­தா­கக் கூறினர்.

உடல் தசை­நார்­களில் காயம், நெருப்­புக் காயங்­கள் போன்­ற­வற்­றுக்­காக ரிஃப்கி கே கே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.