அங் மோ கியோ அவென்யூ 6ல் மோசமான தீவிபத்து

அங் மோ கியோ அவென்யூ 6ல் மோசமான தீவிபத்து

1 mins read
23ea2b45-a863-434d-822d-06992132fb0f
புளோக்­கின் ஏழா­வது மாடி­யில் உள்ள வீட்­டில் மோச­மான தீ எரிந்­து­கொண்­டி­ருந்­த­தா­க­வும் அங்­கிருந்து ஒருவரை வெளி­யேற்­றியதாகவும் சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியது. படம்: சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை/ஃபேஸ்புக் -

அங் மோ கியோ அவென்யூ 6 புளோக் 123இல் நேற்று காலை கடும் தீ வி­பத்து ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து ஏழு பேர் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

சம்­ப­வம் பற்றி தங்­க­ளுக்கு காலை 9.40 மணி அள­வில் அழைப்பு வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

புளோக்­கின் ஏழா­வது மாடி­யில் உள்ள வீட்­டில் மோச­மான தீ எரிந்து­கொண்­டி­ருந்­த­தா­க­வும் அங்­கி­ருந்து ஒரு நபர் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று விடுத்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

புளோக் 123இல் இரண்டிலிருந்து நான்­காவது மாடி வரை அவ்வா (AWWA) அமைப்­பின் தாதிமை இல்­லம் அமைந்­தி­ருக்­கிறது. குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் செல்­வ­தற்கு முன்பே, அங்­கி­ருந்­த­வர்­கள் வெளி­யே­றி­விட்­ட­னர். புளோக்­கின் 5ஆம் முதல் 9ஆம் மாடி­ வரை வசிக்­கும் சுமார் 130 குடி­யி­ருப்­பா­ளர்­களை தனது படை­யி­னர் பாது­காப்­பாக வெளி­யேற்­றி­ய­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

புகை­யா­லும் தலை­சுற்­ற­லா­லும் பாதிக்­கப்­பட்ட ஏழு பேர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, கூ டெக் புவாட் தேசிய பல்­க­லைக்­ க­ழக மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். சம்­ப­வம் பற்றி விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறி­யது.