செய்திக்கொத்து

$10,800 பற்றுச்சீட்டுகளை திருடியவருக்கு 84 வாரம் சிறை

சுமார் $10,800 மதிப்­புள்ள மளி­கைப் பொருள் பற்­றுச்­சீட்­டு­ களைத் திரு­டிய ஆட­வ­ருக்கு 84 வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

42 வயது ஸுல்­கி­ஃப்லி முக­மது யாத்­தீம் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில், வரவு செல­வுத் திட்­டம் 2020இன் கீழ் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­னார்.

சுமார் $2,250 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தற்­காக ஸுல்­கி­ஃப்லி மீது 15 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. மீத­முள்ள பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­ய­தில் பங்கு வகித்­த­தற்­காக மேலும் 58 குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிப்­பின்­போது கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. அத்­து­டன் தமது வளர்ப்பு மக­னைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டும் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஸுல்­கி­ஃப்லி, அவர் தமது மனைவி டாண்டி யொஹைடா சமாட் இரு­வ­ரும் சேர்ந்து மார்­சி­லிங்­கில் உள்ள அஞ்­சல் பெட்­டி­களை கம்­பி­யால் நெம்­பித் திறந்து பற்­றுச்­சீட்­டு­க­ளைத் திரு­டி­னர். மனைவி தீட்­டிய திட்­டத்­தைக் கண­வர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார். திருட்டில் மொத்­தம் 72 பேர் பற்­றுச் சீட்­டு­க­ளைப் பறி­கொ­டுத்­த­னர் என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஸுல்­கி­ஃப்­லி­யின் மனைவி டாண்­டிக்கு குற்றங்க­ளின் தொடர்­பில் முன்னதாக 48 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உணவங்காடி நிலைய கட்டடங்கள் பற்றிய புகைப்படத் தொடர்

உணவங்காடி நிலையங்களின் அழகிய கட்டடக் கலை அம்சங்களைக் காட்டும் புகைப்படத் தொடரை தேசிய மரபுடைமைக் கழகம் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.

தெம்பனிஸ் உணவங்காடி நிலையத்தின் வட்டமான கூரை, அலை அலையாய் விரியும் பாசிர் ரிஸ் உணவங்காடி நிலையத்தின் முன்பக்கம், கம்பத்து வீட்டு வடிவில் உள்ள கேலாங் செராய் உணவங்காடி நிலையம் போன்றவை அதில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.

தொடருக்காக 12 உணவங்காடி நிலையங்களின் 100 படங்கள் எடுக்கப்பட்டன. உணவங்காடி நிலையக் கலாசாரத்தைப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் எடுத்துவரும் தனது முயற்சிகளில் புகைப்படத் தொடரும் ஒன்று என தேசிய மரபுடைமைக் கழகம் கூறியது.

www.roots.gov.sg இணையத் தளத்துக்குச் சென்று புகைப்படங்களைக் காணலாம்.

அரிசி அளவில் இயந்திர மனிதன்

ஓர் அரிசி மணி அளவுக்கு சிறிய இயந்திர மனிதனை இங்குள்ள அறிவியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தற்போதுள்ள இயந்திர மனிதர்கள் செல்ல முடியாத சிறிய இடங்களிலும் சிக்கலான வழிகளிலும் அந்த இயந்திர மனிதனால் நுணுக்கமாக நகர்ந்து செல்ல முடியும். வருங்காலத்தில் அதனை மூளை அறுவை சிகிச்சை போன்றவற்றில் மருத்துவத் துறையில் பயன்படுத்த ஆய்வாளர்கள் திட்டமிடுகின்றனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இயந்திர, விண்வெளிப் பொறியியல் துறை ஆய்வாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கினர். மனிதர்களுக்கு கேடு விளைவிக்காத மூலப்பொருட்களில் காந்தசக்தி வாய்ந்த சிறிய துகள்களை ஆய்வாளர்கள் பொருத்தினர். காந்த சக்தி இயக்கப்பட்டால் ஒருவர் இயந்திர மனிதனை இயக்கி செயல்படுத்தலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!