சமூகத்தில் 19 பேர் உட்பட 24 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் 19 பேர் உட்பட 24 பேருக்கு கிருமித்தொற்று

2 mins read
c68b32ad-bcf4-4509-9aa3-9bc36dea4757
தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்ட மூன்றாவது உணவங்காடி நிலையமான ரெட்ஹில் சந்தை, உணவங்காடி நிலையத்தில் அனைத்துக் கடைக்காரர்களுக்கும் நேற்று கட்டாய கிருமிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று கண்ட ஒருவர் அங்கு பலமுறை சென்று வந்ததே அதற்குக் காரணம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூக அள­வில் 19 பேர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 24 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. சமூ­கத்­தில் தொற்று உறு­தி­யான அந்த 19 பேரில் 16 பேர், முன்­ன­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

அவர்­களில் 10 பேர் ஏற்­கெ­னவே தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­டு­விட்­டனர் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. எஞ்­சிய அறு­வ­ருக்கு கண்­கா­ணிப்­புப் பரி­சோ­தனை மூலம் தொற்று உறு­தி­யா­னது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த ஐந்து பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அவர்­களில் இரு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 62,339 ஆக உள்­ளது.

தெலுக் பிளாங்கா டிரைவ்

உணவு நிலை­யம் மூடப்­பட்­டது

இவ்­வே­ளை­யில் தெலுக் பிளாங்கா டிரைவ் புளோக் 79ல் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­தைத் தொடர்ந்து உணவு நிலை­யம் நேற்று மூடப்­பட்­டது.

நாளை வரை நிலை­யம் மூடப்­பட்டு அங்கு முழு­மை­யான சுத்­தி­க­ரிப்­புப் பணியும் கிருமி நாசி­னித் தெளிப்­பும் மேற்­கொள்­ளப்­படும்.

அந்த 42 வயது உண­வங்­கா­டிக் கடைக்­கா­ர­ருக்கு சனிக்­கி­ழமை 12ஆம் தேதி உடல்­வ­லி­யும் ஞாயிற்­றுக்­கி­ழமை 13ம் தேதி காய்ச்­ச­லும் ஏற்­பட்­டது. பின்­னர் அவ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. புக்­கிட் மேரா உண­வங்­காடி நிலை­யத்­தில் கிருமி தொற்­றிய ஊழி­ய­ரின் குடும்ப உறுப்­பி­னர் இவர்.

புக்­கிட் மேரா வியூ உண­வங்­காடி நிலையத்­தில் 9 பேருக்கு தொற்று

புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யத்­தில் உரு­வா­கி­யுள்ள தொற்­றுக் குழு­மத்­தில் மேலும் ஒன்­பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அங்­குள்ள உண­வுக் கடை­யில் வேலை பார்ப்­ப­வர்­கள் அல்­லது அவர்­க­ளது குடும்­பத் தொடர்­பு­கள் ஆவர்.

இவர்­க­ளை­யும் சேர்த்து தொற்­றுக் குழு­மத்­தில் இது­வரை 25 பேர் உள்­ள­னர்.

சுத்­திக்­க­ரிப்­புப் பணிக்காகவும் தொற்று பர­வு­வதை நிறுத்­த­வும் உண­வங்­காடி நிலை­யம் வரும் 26ஆம் தேதி வரை மூடப்­படும்.