தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேடப்பட்டு வந்த பிரெஞ்சு நாட்டவர் சிங்கப்பூர் வழியாக பயணத்தைத் தொடர்ந்தார்: உள்துறை அமைச்சு

2 mins read
ad7c9d51-dbe2-46d3-93c3-676b3a158925
-

அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த பிரெஞ்சு நாட்டவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) சிங்கப்பூர் வழியாக இடைவழிப் பயணம் மேற்கொண்டனர். சிங்கப்பூரைவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 15) புறப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

திரு டெய்­லட் ரெமி வின்­சென்ட் கிறிஸ்­டோஃப்-திரு­மதி பர்­டெட் லியோனி தம்­ப­தி­யும் அவர்­க­ளது மூன்று பிள்­ளை­களும் மலே­சி­யா­வில் தங்­கி­யி­ருந்­த­னர். லங்­கா­வி தீவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­ய­தற்­காக அவர்­கள் கடந்த மாதம் கைது செய்­யப்­பட்­ட­னர்.

மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வழி­யாக பிரான்­சுக்கு அவர்­களை மலே­சிய அதி­கா­ரி­கள் நாடு கடத்­தி­னர்.

சிங்­கப்­பூர் வழி­யாக அவர்­கள் இடை­வ­ழிப் பய­ணம் மேற்­கொண்­ட­போது கர்ப்­பி­ணி­யான திரு­மதி பர்­டெட், தமக்கு உடல்­ந­லம் சரி­யில்லை என்று தெரி­வித்­தி­ருந்­தார். சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அவ­ருக்கு சிறப்பு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

சாங்கி விமான நிலை­ய மருத்­து­வர்­க­ளின் ஆலோ­சனையின் அடிப்­ப­டை­யில் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்கு அவர் கொண்டு செல்­லப்­பட்­டார்.

"டெய்­லட்­டும் அவ­ரது பிள்­ளை­களும் சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 3ல் உள்ள இடை­வ­ழிப் பய­ணி­க­ளுக்­கான ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்­த­னர். மலே­சி­யா­வி­லி­ருந்து பிரான்­சுக்கு அவர்­கள் நாடு கடத்­தப்­பட்­ட­தால் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அவர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

பர்­டெட்­டிற்கு மருத்­து­வக் கவ­னிப்பு வழங்­கப்­பட்ட பின் டெய்­லட் மற்­றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளு­டன் ஹோட்­ட­லில் அவர் மீண்­டும் இணைந்­தார்," என்று உள்­துறை அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

திரு பெய்­லட், கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக லங்­கா­வி தீவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருந்­த­தாக theVibes.com இணை­யத்­த­ளம் குறிப்­பி­டு­கிறது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் பிரான்­சில் எட்டு வயது சிறு­மியை அவ­ளது பாட்­டி­யி­ட­மி­ருந்து கடத்திய தில் திரு டெய்­லட்­டிற்கு பங்கு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதை­ய­டுத்து, அனைத்­து­லக போலிஸ் அவ­ருக்கு கைதாணை பிறப்­பித்­தி­ருந்­த­தாக theVibes.com கூறி­யது. பின்­னர் சுவிட்­சர்­லாந்­தில் பிரெஞ்சு, சுவிஸ் போலி­சா­ரால் அச்­சி­றுமி மீட்­கப்­பட்­டாள்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் தங்­க­ளது இடை­வ­ழிப் பய­ணத்­தின்­போது எந்­த­வொரு தரு­ணத்­தி­லும் அவர்கள் ஐவ­ரும் சிங்­கப்­பூர் போலி­சா­ரால் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­ப­ட­வில்லை என்றது உள்­துறை அமைச்சு.

"அவர்­கள் இடை­வ­ழிப் பய­ணி­கள் என்­ப­தால், அவர்­கள் பய­ணம் செய்த விமா­னத்­தின் பரா­ம­ரிப்­பில் இருந்­த­னர். ஜூன் 15ஆம் தேதி பிரான்­சுக்கு பய­ணத்­தைத் தொடர டெய்­லட்­டிற்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

திரு டெய்­லட்­டு­டன் சேர்ந்து தாமும் தமது பிள்­ளை­களும் பிரான்­சுக்கு பய­ணத்­தைத் தொடர திரு­மதி பர்­டெட் விடுத்த கோரிக்­கையை விமான நிறு­வ­னம் ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் அப்­பேச்­சா­ளர் சொன்­னார்.